‎திருநாமத்தால் துன்பத்துக்கு துறவு கொடுத்து, இன்ப வாழ்வை கொடுக்கிறவன் சிவசித்தன்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுரு

‎திருநாமத்தால் துன்பத்துக்கு துறவு கொடுத்து, இன்ப வாழ்வை கொடுக்கிறவன் சிவசித்தன். அதிகாலை எழுந்து சிவகுருவுக்கு காலை வணக்கம் சொன்னேன். சிவசித்தன் திருநாமம் சொன்னேன். தேகசற்ப ஆற்றல் உள்ளங்காலில் இருந்து தேகம் முழுவதும் பரவி உச்சிக்கு சென்றது. தலையின் பின்புறம், நெற்றி பாரமானது. கண்களில் அழுத்தமாய் சொருகியது. புருவமத்தி தெறித்தது.

1 (3257)

காணாத காட்சி வானில் ஒளிவீசும் நிலா பால் ஒளியை மறைத்தவண்ணம் செல்லும் கருமையான மேகக்கூட்டங்கள், அதையும் மீறி குளிர்நிலவு குளிர வைக்கிறது. ஒருபுறம், அல்லிமலர் ஒன்று அழகாய் மலர்ந்து தெரிந்தும் முகம் தெரியாமல் காட்சி கொடுக்கிறது.

பதிவு பதியும்போது தேகம் குளிரையும், வெப்பத்தையும் உணர அகம் பேரானந்தப்படுகிறது. உணர்த்துபவன் சாதாரணமானவன் அல்ல, அனைத்துக்கும் அப்பாற்பட்டவன், அபூர்வமானவன், ஒப்பற்றவன், படைத்தவன், பரவசப்படுத்துபவன், ஆடம்பரமற்று அனைவரையும் அன்பால், அருளால், பேராற்றலால் ஆட்கொண்டு ஆள்பவன்.‪‎

நன்றி சிவகுருபெயர்   கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment