‎ஒவ்வொருவரும் துன்பத்தில் இருந்து மீள

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு,

‎ஒவ்வொருவரும் துன்பத்தில் இருந்து மீள…
‎மனதில் ஒலிக்கவேண்டும் ‎சிவசித்தன் திருநாமமே…

‎அண்ணன்மகன் மங்களநிகழ்வுக்கு செல்ல அனுமதி வாங்கும்போது சிவசித்தன்திருநாம கார்டு வழங்கவும் அனுமதியுடன் ஆசியும்பெற்று ஒவ்வொருவர் மனதிலும் திருநாமம் ஒலித்து அவர்கள் வியாதி .துன்பத்தில் இருந்து மீளவேண்டும் என்ற எண்ணத்துடன் விடைபெற்றேன்…

1 (3254)

‎அண்ணனும் அண்ணியும் முதல்நாள் என்னையும் மணமகனுக்கு திருநீறுபூச அழைத்தார்கள். ‎சிவசித்தன் என்று ‎திருநாமத்தை அகத்தில் எண்ணியவுடன் தேகசற்ப ஆற்றல் விர் என்று மின்னலாய் கிளம்புவதை உணர்ந்தேன். சிவசித்தன் கூற்றுக்கு அடிபணித்து அமைதியை கடைபிடித்து வலதுகையை சிரம்மேல் வைப்பதுபோல் செயலானேன். ‎எனக்குள் இருந்த சிவசித்தன் ஆற்றலை உணர்ந்த அண்ணனுக்கு திருநாமகார்ட் கொடுத்து சுருக்கமாக விளக்கினேன்.

‎முப்பதுவருடமாக விளக்கு ஏற்றி வணங்கி வரும் வீட்டுக்கு அருகில் உள்ள மிகபழமையான சிறு கோவிலுக்கு மறுநாள் அதிகாலையில் மணமகனின் அம்மா அவருடைய அக்கா, தங்கையுடன் செல்லும்போது என்னையும் கூட்டிச்சென்றார்கள். ‎சூடமேற்றி மற்றவர்கள் வணங்கியபிறகு கால்களை மடக்கி அமர்ந்துகொண்டு சிவசித்தன் திருநாமம் சொன்னேன் ‎தேகசற்பத்தின் அசைவுகள் சற்பத்தின் ஓசை,சிவசித்தனுக்கு விளக்கேற்றி கையால் வளைந்து வளைந்து காட்டுவது அற்புதமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

‎கண்ட மூவர் மனதின் இளக்கத்தை உணர்ந்து சிவசித்தன் திருநாமக்கார்ட் கொடுத்து கோவிலிலேயே ‎தேகசற்பஅசைவுடன்அசையாத அகத்தினுள் மகிழ்வுடன் விளக்கினேன்.
ராமன் ‎கோவிலுக்கு செல்லாமலே சிவசித்தன் திருநாமத்தின் கார்ட் மகிமையால் பெற்றுவருகின்ற இன்பத்தை மற்ற அனைவரும் பெற்று மகிழ ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அனைவருக்கும் ‎திருநாமக்க்கார்ட் கொடுக்கும் பணியால் குடும்பம் தழைத்து செழிக்குமே.

நன்றிசிவகுரு.பெயர்   கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment