விலா எலும்பில் வலி உள்ளது குப்புற படுத்து…

தேகப்பிரபஞ்ச உணர்வுகள்

நம் உடலின் சூரிய கலையையும், சந்திர கலையையும் ஒரே சீராக இயங்கச் செய்யும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


ஓம் சிவகுருவே சரணம்

வணக்கம் சிவகுரு,

மன்னிக்கவும் சிவகுரு நான் புதன் கிழமை பயிற்சி முடிந்ததும் எனது அக்காவின் விருப்பத்தால் அவர்களுடன் சுருளி தேக்கடி சென்றுவிட்டு அப்பா மேனேஜராக வேலை பார்க்கும் கம்பம் மெட்டுக்கு மேல் உள்ள ஏலக்காய் எஸ்டேட் சுற்றி பார்க்க சென்று விட்டோம் வியாழன் மதியம் வந்து விடலாம் என அவர்கள் கூறியதால் சென்றேன் ஆனால் முதல் நாள் போட்டிங் கிடைக்கவில்லை என மறுநாளும் போய் முயற்சி பண்ணி கிடைக்காததால் 8½க்கு தான் வீட்டிற்கு வந்தோம். ஆகையால் தான் நேரம் நெருக்குவதை நினைத்து வேனில் இருந்தபடி தங்களுக்கு தெரிய படுத்தினேன் சிவகுரு.

வலது காலை தூக்கி வைத்து வலது கையில் நான்கு விரலை உள்ளங்கை ரேகையில் படும்படி வைத்து மடக்கி பெரு விரலை அடி வயிற்றில் தொப்புலுக்கு மேல் நேராக வைத்து தலையை லேசாக பின்னோக்கி வளைத்து புருவமையத்தை பார்க்க வேண்டும்.

அவ்வாறு பார்த்த போது முதுத் தண்டின் கீழ் எப்பொழுதும் இருக்கும் அதிர்வு மறைந்து இடது பக்க தோல்பட்டை நடு பிடரியில் அதிர்வும் எரிச்சலும் தெரிந்தது. தீடீர் என்று பிடரியில் இருந்து நடு உச்சியில் ஒரு வினாடி ஏதோ ஒன்று வேகமாக ஏறியது போல் இருந்து முகம் எல்லாம் வேர்த்தது. நடுமுதுகில் வேர்த்து தொண்டை வரண்டது.

என் மனம் கஷ்டமாகவும், அலைபாய்ந்து கொண்டே இருந்தது ¼மணி நேரத்திற்கு பின் என்னை நானே அடக்கினேன். சில நேரம் குளிராகவும் சில நேரம் வேர்க்கவும் செய்தது. இது மூன்று நாட்களாகவே உள்ளது. தோல்பட்டை தலை வலதுபக்கம் பிடரிஎல்லாம் ஒரு நாள் முழுதும் வலித்தது. கண் சிவந்தது. நாக்கு புண்ணாகி விட்டது. வயிற்றில் கை வைத்த இடம் தீடீர் என்று ஒரு நிமிடம் குத்தியது.

சிவகுரு என் வாழ்நாளில் அன்று தான் நான் விழுந்தது. bag ஒன்று தைக்க கொடுக்கவும், ஆனந்த மெட்டல் போகவும் நானும் சரவணனும் சென்றோம் இரயில்வே பாலம் தாண்டியதும் சாராயக்கடை தாண்டி மெயின் ரோட்டில் அவனுக்கு போன் வரவும் நின்று பேசினான். அப்பொழுது எனக்கு அந்த இடம் சரியாக தெரியவில்லை. குரு மந்திரம் சொல்ல ஆரம்பித்தேன். பின் அவனை போன் நிறுத்தி இடம் சரியில்லை என்றேன் புரிந்து கொண்டு உடனே எடுத்துவிட்டான்.

2 (241)திரும்பும் போது என் மனதில் ஏதோ நடக்க போகிறது. குருவே நீங்கள் என் உடன் வரவேண்டும் என மந்திரம் கூறினேன் கீரை தெரு அந்த மூன்று சந்து சந்திக்கும் இடத்தில் ஒரு மினிவேன் சைடும் எங்கள் பைக்கை உரசி ஒருவன் வேன்முன் தீடீர் என்று சைக்கிளில் வந்து எங்களை உரசி திருப்பினான் மந்திரம் கூறிக் கொண்டே வந்ததால் படவில்லை. ஊருக்குள் வந்ததும் வந்து விட்டோமே என கதிர்அறுப்பு மண்டபத்திலிருந்து சொல்லவில்லை எப்படி மறந்தேன் என தெரியவில்லை. ஆனால் விழப்போகிறோம் என உள் உணர்வு கூறியதால் அவனை பார்த்துக் கொண்டும் முன்னாள் பார்த்துக் கொண்டும் இருந்தேன் ப்ரியா ஹோட்டல் முன் வந்ததும் அந்த சிறுவன் தீடீர் என்று சைக்கிலில் தீடீர் என்று குறுக்கே வந்து விட்டான்.

விழுந்ததும் நான் எழுந்து அவனைத் தான் பார்த்தேன் ஏற்கனவே காய்ச்சலில் சரியானாலும் அப்ப அப்பா தலை சுற்றியதால் பயம் நான் பார்த்த போது அவன் தலை தரையில் விழுந்தது. பதறி சரவணா என்றபோது பதில் இல்லை பதறி குருவே என நினைத்து சரவணா சரவணா என கத்தியும் என் உயிர் திரும்பியது.

வீட்டிற்கு வந்து இதுவரை என் கணவர் தவிர யாரிடமும் கூறவில்லை என் கணவருக்கு கூட காலையில் உங்கள் போன் பண்ணும் போது தான் கூறினேன்.

இதில் விழுந்ததை விட எனக்கு எப்படி இப்படி தைரியம் வந்தது எனக்கு தெரியவில்லை. வந்ததும் பொருள்களை போட்டு விட்டு அனைவருக்கும் வலியுடனே டிபன் செய்து பொட்டுவிட்டு படுக்கும் போதே என் உடம்பில் எங்கு எங்கு அடிபட்டது என பார்த்து இருவரும் உங்களிடம் வாங்கிய வீபூதியை பூசிவிட்டு படுத்தோம்.

இது என் மனதை பாதிக்கிறது ஏன் இப்படி நடந்தது. அந்த இடத்தில்  நிறைய அசம்பாவதம் நடந்துள்ளதாகவும் அதுவா தட்டியுள்ளது என அவர் கூறினார். சரவணனும் அவன் நண்பர்களும் அந்த இடத்தில் விழுந்ததாக கூறினான்.

எனக்கு மனம் சமாதானம் அடையவில்லை. இந்த மந்திரமும் உங்களையும் நான் நினைத்தால் பெரிய விபத்திலிருந்து தப்பித்ததாக தோன்றியது. அவனுக்கு தான் கால் நொண்டி நடக்கிறான் கீழே உட்க்கார முடியவில்லை என்கிறான். புண் ஆறி உள்ளது.

எனக்கு விலா எலும்பில் வலி உள்ளது குப்புற படுத்து பயிற்சி பண்ணினால் முடியவில்லை. வலி அதிகமாக உள்ளது. படுத்தால் திருப்ப முடியவில்லை எழுந்திருக்கவும் கஷ்டமாக உள்ளது. கண் திருஷ்டி போல் நடந்துவிட்டது சிவகுரு.

 

வாசிதேக பக்தை

ராதாதேவி மணிவண்ணன்

சிந்தாமணி, மதுரை.

Post a Comment