விதி முடிந்து விட்டது என்றதை கண்ணீருடன் சொன்னார்…

கல்யாணசுந்தரம் சிவா

சிவகுருவே சரணம்

புது பயிற்சியாளர் சிவகுரு சிவசித்தனை நாடி வந்து நாடி பார்க்கப்பட்டு இரண்டு நாள்கள் தான் ஆனவர்.

பெயர்            : பாலகிருஷ்ணன்

வில்வம் எண்     : 15 03 007

வயது            : அறுபத்துஏழு

ஊர்               : மதுரை

அனுமதி சீட்டு வாங்கிய பின் கூட்டத்தில் சிவகுருவின் முன் தனக்கு இரண்டுதடவை ஹர்ட் அட்டாக் வந்து மருந்து மாத்திரைகளுடன் சிரமப்படுவதை மரண பயத்துடன் பேசினார். அன்றில் இருந்து உணவு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் தவறாமல் பின்பற்றினார்.

நாடி பார்க்க வரும்போதே அவ்வளவு சுறுசுறுப்புடன் வந்து மனநிறைவுடன் படியில் ஏறியது ஆச்சரியமாக இருந்தது. பழைய பயிற்சியாளர்கள் சேவையாளர்கள் கூட விதிமுறைகள் பின்பற்றி, இவ்வளவு விரைவில் பலன்களை அடையவில்லை. நானே இன்று முதல் காலையில் பழைய சோற்றுடன் பத்துசின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட ஆரம்பித்தேன் இனிதொடர்வேன்.

நன்றி சிவகுருவேவணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு

விதியின் பெயரைசொல்லி ஏமாற்றுபவன் ஜாதகக்காரன் !!!

2 (237)சிவகுரு சிவசித்தனிடம் முழு நம்பிக்கை வைத்து அவரால் உணர்ந்து படைக்கப்பட்ட வாசிதேகக்கலை பயிலும் விருதுநகர் பயிற்சியாளர்

 

பெயர்            : க.தங்கையா

வில்வம் எண்     : 12 08 208
அவர்கள் தனது எழுபத்தெட்டாவது பிறந்தநாள் நல்வாழ்த்தை சிவகுரு சிவசித்தனிடம் இன்று பெற்றார்.

க .தங்கையா அவர்கள் ஒளித்திருத்தலத்தில் பயிற்சி சேரும்போது ஜாதககாரன் அவர் விதி முடிந்து விட்டது என்றதை கண்ணீருடன் சொன்னார். சிவகுரு அப்படி எல்லாம் நடக்காது என்பதை செயலாக்கியும் காண்பித்தார்.

அன்று ஜாதகக்காரன் சொன்னபிறகு இன்று மூன்றாவது பிறந்தநாளை மனநிறைவுடன் சிவகுருவின் ஆசியால் கொண்டாடினார் சிவகுருசிவசித்தனிடம் சரணடைந்தவர்களுக்கு விதி கட்டம் நாள் கோள்கள் வேலை செய்யாது விதியை வாசிதேகக்கலையால் மாற்றிகாண்பித்தார். சிவகுருசிவசித்தன் நன்றி சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு.

Post a Comment