வாசியோகம்

 

வாசியோகம் என்றால் என்ன?

வாசியோகம் ஏன் பயில வேண்டும்?

வாசியோகத்தின் சிறப்பம்சம் என்ன?

வாசியோகத்தின் முக்கியத்துவம் என்ன?

 Sivasihan 028

வாசியோகத்தின் சிறப்பம்சம் :

     வாசியோகம் பயின்றால் வாழ்நாள் முழுவதும் மருந்துமாத்திரைகளை மனிதன் எடுக்கத் தேவையில்லை.

 

 

வாசியோகத்தின் முக்கியத்துவம் :

 1. உடல் நோய் நீங்கி வாழவும்
 2. உடல் ஆரோக்கியத்துடன் வாழவும்
 3. நேர்மறை எண்ணங்களுடன் வாழவும்
 4. ஆன்மாவை உணர்ந்து கொள்ளவும்
 5. இறை ஆற்றலை உணர்தலும் ஆகும்.

 

 வாசியோகம் ஏன் பயில வேண்டும்?

மனிதன் தனது உடலை நோயினின்று காத்து, இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழவும், உடல், மனம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, தனது ஆன்மாவை உணர்ந்து, இறை ஆற்றலை உணர்ந்து உன்னதமான வாழ்வை வாழ வேண்டுமெனில் வாசியோகம் அவசியம் பயில வேண்டும்.

வாசியோகம் என்பது என்ன?

வாசியோகக் கலை என்பது சிவகுரு சிவத்தன் மனித உடலில் உள்ள நோய்களை, அவனது உடலில் செயல்படும் ‘நாடி’யின் தன்மையினை உணர்ந்து அதன் செயல்பாடுகளுக்கேற்ப, ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி யோகப் பயிற்சிகளை வழங்கும் உடலில் உள்ள அணுக்களின் குறைபாடுகளை சரிசெய்து உடலை, உடலின் உள் உறுப்புகளை இயங்கச் செய்து, உடலில் உள்ள இறை ஆற்றலை இறுதியில் உணர்த்துவதே வாசியோகம் ஆகும்.

நாடி :

சிவகுரு சிவசித்தன் தனது சூட்சமத்தினால், ஒவ்வொரு மனிதனின் உடலில் உள்ள ‘நாடி’யின் தன்மை அறிந்து, ‘நாடி’யின் செயல்பாடுகளுக்கேற்ப ஒவ்வொரு வருக்கும் தனி தனி யோகப் பயிற்சிகள் வழங்குகிறார்.

ஒரே மாதிரியான யோகப்பயிற்சிகள் அனைவருக்கும் வழங்கப்படுவது இல்லை.

தனி தனி பயிற்சிகள், பயிற்சிகளின் மாற்றம் அவரவரது உடல் தன்மைக்கேற்ப மாறுபடும்.

விதிமுறைகள் :

 1. வாசியோகம் பற்றிய தகவல்கள் அறிய வேண்டும் எனில் வாசியோகம் நடத்தப் பெரும் ஸ்ரீவில்வம் யோகா மையம், மதுரையில் வந்து தான் பெற வேண்டும்.
 2. வாசியோகப் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டுமெனில், மதுரையில் உள்ள ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் தான் கற்க வேண்டும்.
 3. சிவகுரு சிவசித்தன் நேரடியாக ‘நாடி’ பார்த்து பயிற்சிகள் வழங்கி, பயிற்சிகளை நேரடியாக கண்காணிப்பதால் உள்ளூர், வெளியூர் நபரால் சிவகுருவின் அனுமத்திபடி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 4. வாசியோகப் பயிற்சிகள் சேருவதற்கு முன்னர் வாசியோக விதிமுறை புத்தகத்தினை நன்கு படித்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒப்புதல் அளித்த பின்னரே பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர்.
 5. வாசியோகப் பயிற்சியில் சேர்ந்தவர்கள் எந்தவித மருந்து, மாத்திரைகளும் எடுத்தக் கொள்ளக்கூடாது.
 6. வாசியோகப் பயிற்சியில் சேர வேண்டுமெனில் அசைவம் உண்பதை கட்டாயம் விட்டுவிட வேண்டும்.
 7. விதிமுறைப் புத்தகத்தில் உள்ள மற்ற விதிமுறைகள், உணவு விதிமுறைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
 8. வாசியோகப் பயிற்சிகளை தினமும் சிவகுருவின் கண்காணிப்பில் (வெளியூர் எனில் சிவகுருவின் அறிவுரைப்படி) கட்டாயம் செய்ய வேண்டும்.

வாசியோகப்பயிற்சிகள்:

 1. ஒவ்வொருவருக்கும் தனி தனி யோகப் பயிற்சிகள், அவரவரது உடல் தன்மைக்கேற்ப
 2. பயிற்சிகளின் எண்ணிக்கையும் அவரவரது உடல் தன்மைக்கேற்ப
 3. பயிற்சிகளின் மாற்றமும் அவரவரது உடல் தன்மைக்கேற்ப
 4. பயிற்சிகள் யாவும் சிவகுரு சிவசித்தனின் தீர்மானப்படி தான் கற்றுத்தரப்படும்.
 5. தனி மனிதனின் வேண்டுதலுக்கேற்ப பயிற்சிகள் சொல்லித்தரப்பட மாட்டாது.

உணவு முறை விதிகள் :

உண்ணும் உணவு தான் உடலில் கழிவுகலாக தேங்கி, கழிவுகள் வெளியேறாத நிலையில் உடலில் நோய்களாக மாறுகிறது.

எனவே உணவு முறைகள், உணவு நேரம் இவற்றில் சிவசித்தன் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதில் எந்த விதிவிலக்குகளும்(rules relaxation, compromise) கிடையாது.

கடுமையான உணவு விதிமுறைகள், உடலை விரைவில் குணப்படுத்தும் வல்லமை உடையது. மேலோட்டமாக கடுமையாக தோற்றமளிக்கும் விதிமுறைகள், வாசியோகப் பயிற்சிக்கு வந்த பின்னர் நடைமுறைப்படுத்தும் பொழுது உடல் உணர்வுகள் மூலம் எளிமையாகவும் தேவையானதாகவும் தோன்றும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Post a Comment