வாசியை உணர்த்தும் சிவசித்தன்…

சிவசித்தன்

தியானத்தின் உண்மை நிலையை உணரவைப்பது, சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


வாசியை உணர்த்தும் சிவசித்தன்

 

பிராணன் என்பது வெறும் மூச்சல்ல

அற்புதமான ஆன்மசக்தி! அச்சக்தியினை

இடவல நாசியறிந்து நாசியதில்

வாசியான பிராணனை உள்ளேற்றி!

உள்ளேற்றி உச்சியிலே தானேற்றி!

சிவமும் ஆகி குருவும் ஆகி சிவகுருவாக

என்னுள் தோன்றி சிவசோதியாய் ஒளிர்கின்ற

ஒளியே! சுழுமுனையின் சூட்டை

உணரவைத்த சிவசோதியே! எம் சிவசித்தனே!

உம் தாழ் பணிகின்றேன்! வாழ்வதனை

வாழத்தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்

மனிதர்களே! யாம் உணர்ந்த சிவம்தன்னை

யாவரும் உணர வாசிதேக வாசல்தேடி

வா மனமே! வாசிகலை பயின்று உணர்மனமே! 

புறம் அதனில் சிந்தனையை சிதற விட்டு

மன சக்தியதை இழக்கின்ற மனிதனே!

அழிகின்ற பொருட்களில் நாட்டம் வைக்காதே

மனமே! அழியாத சக்தியான வாசியதை

அகம்தனில் நேசி மனமே! நேசித்த

வாசிதனை பூசி(ஜி) மனமே! பூசித்த

வாசிதனில் சிவமதனைக் காண் மனமே!மாமிசமுண்டு உடல் வளர்க்கும் மானிடரே!

உன் தேகமெனும் கோவிலிலே

வாசியெனும் பெருந்தெய்வம் இருக்குதப்பா

அதை அறியாமல் அசைவமுண்டு

அழியாதே மானிடனே!1 (1591)

எல்லாமும் தெரியும் என்கின்ற எண்ணம்

கொண்டு ஸ்ரீவில்வம் அதை நெருங்காதே!

எல்லாமும் அறிந்த எம் ஆசானை

ஆராய்ந்து அழியாதே மானிடனே!

சிவனாரின் அம்சமாக சிவசித்தன் அருள்கின்றார்!

இக்கூற்றை உணர்வதற்கு உயிர்க்கலையை பயில்மனமே!வாசிதேக குருகுலத்தில் வந்தவர்கள் ஏராளம்!

பலன் அடைந்தவர்கள் பல்லாயிரம்!

இங்கு ஆண்டி என்றும் அரசன் என்றும்

பேதமில்லை! எல்லோரும் ஓர் குலம்!

எல்லோரும் ஓர் நிறை! என்றதொரு

வாக்கே எம் சிவகுருவின் திருவாக்காம்!அகந்தை எண்ணம் கொண்டு

எம் ஆசானை நெருங்காதே!

காவியுடுத்தி காசாசை கொள்ளும்

பொய்யர்கள் போல் எண்ணாதே

எம் ஆசானை! ஆதிசிவன் அருள்பெற்ற

அருள்ஞான சித்தனடா எம் சிவசித்தன்!சிவகுருவின் பக்தன்,

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

Post a Comment