வாசியின் தாக்கம்

 

வாசியோகம் பயிலும் பயிற்சியாளர்களுக்கு சிவசித்தனின் வாசியோகம் எவ்வாறு தாகத்தினை ஏற்படுத்துகின்றது?

 

தனி மனிதன்: (individual)

வாசியோகம் பயிலும் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவரும் தேகத்தில் முதலில் மாறுதல்களை உணர்கிறார்கள், வாசியோகப் பயிற்சிகளும், உணவு விதிமுறைகளும், விதிமுறைகளையும் உண்மையாகத் தவறாமல் கடைபிடிப்பவர்களுக்கு

Sivasithan 001

தமது தேகத்தில் உள்ள கழிவுகள், சளி, மலம், நீர், வியர்வை, வாயு மூலமாக வெளியேறுவதையும், உடலில் உள்ள செயல்பாடுகள் இழந்த அணுக்கள் திரும்பவும் செயல்பட ஆரம்பித்து உள் உறுப்புகள் சீராக இயங்கி, உடலில் இருந்து வந்த நோய்கள் நீங்கி, தேக ஆரோக்கியம் உணர்ந்து அன்றாட வாழ்வினை, வாழ்வின் நிகழ்வுகளை சந்தோஷமாக எதிர்கொள்ளும் தேக ஆற்றல் பெறுகின்றனர்.

 

 

பழக்கவழக்கங்கள்: (Habitual Things)

 

வாசியோகப் பயிற்சிகள் தனிமனிதனின் அன்றாடப் பழக்கவழக்கங்களில் எவ்வாறு தாக்கம் ஏற்படுகிறது?

1. அதிகாலை எழும் பழக்கம் இல்லாதோரை அதிகாலை எழச்செய்து, தினமும் மையத்திற்கு வந்து பயிற்சிகள் மேற்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கி உள்ளது.

2. தினமும் காலைக்கடனான மலம்கழித்தல் பழக்கத்தினையும், மலச்சிக்கல் இல்லா நிலையில், தேகத்தின் மூலமான மலத்தினை வெளியேற்றுவதால் தேகத்தில் முக்கியப் பகுதியான வயிறு லேசாக உணர்வதை உணர்கிறார்கள்.

3. அதிகாலை எழுந்து, குளித்து, பயிற்சிகள் செய்வதால் காலையின் தொடக்கம் நிம்மதியாகவும், அந்த நிம்மதியால் அன்றாட செயல்பாடுகள் தாமதமின்றி நடத்தவும், அன்றாட வாழ்க்கையில் காலை முதல் இரவு வரை உடல், மனம் சஞ்சலமின்றி அனைத்து செயல்களையும் செய்ய முடிகிறது என பயிற்சியாளர்கள் மனமுவந்து சொல்கிறார்கள்.

4. பயிற்சிகளை தினமும் செய்வதாலும், விதிமுறைகளைக் கடைபிடிப்பதாலும் உணவு விதிமுறைகளைப் பின்பற்றுவதாலும் உடலில் உள்ள கழிவுகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறுவதினை உணர்ந்துள்ளார்கள்.

5. வாசியோகம் செய்யும் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவரும் மிக முக்கியமாக உணர்ந்து சொல்வது தொலைத்த தூக்கத்தினை திரும்பப் பெற்றுள்ளோம் என்பதே. ஆழ்ந்த தூக்கம் என்பது அரிய செயலாகி உள்ள நிலையில் இங்கு பயிற்சி செய்யும் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவரும் அதை அனுபவித்து உணர்கின்றனர்.

6. வாசியோகம் செய்யும் பயிற்சியாளர்கள், மருந்து மாத்திரைகளை அறவே தவிர்த்து, அதன் பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற்று மன மகிழ்வுடன் வாழ்கிறார்கள்.

7. வாசி தேகத்தில் உடல் குறைகளை மட்டுமின்றி, தேகத்தில் இது வரை நமக்கு தெரிந்திராத, வெளிப்படுத்தாத, கவனம் செலுத்தாத சின்ன சின்ன நோய்களும், குறைகளும் தானாக சரியாவதையும் பயிற்சியாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

8. வாசி, தேகத்தின் குறைபாடுகளை சரிசெய்வதுடன், அக எண்ணங்களை சீர்படுத்தும் செயல்களையும் மேற்கொண்டுள்ளது. எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதையும், எண்ணங்கள் செயலாக மாறுவதையும் பயிற்சியாளர்கள் உணர்ந்து சொல்கிறார்கள்.

9. எண்ணங்கள் தான் எல்லா செயல்களுக்கும் காரணம் என்பதனை சிவகுரு சிவசித்தன் அடிக்கடி வலியுறுத்துகிறார். இங்கு வரும் பயிற்சியாளர்களும் தமது நோய்க்கு தமது எண்ணங்களும் கவலைகளும், தமது தவறான, தேவையில்லாத உணவுப் பழக்கவழக்கங்களும் தான் என்பதனை நமக்கு உணர்ந்துள்ளனர்.

10. அசைவம் முதலான உடலுக்குத் தேவையற்ற உணவினையும், போதை மற்றும் லாகிரி வஸ்துக்களின் தாக்கத்தினையும், அதன் தீங்கினையும் நன்கு உணர்ந்து உணவு விதிமுறைகள் உடம்பைப் பெறுவதற்கான விதிமுறைகள் என்று அனுபவித்து உணர்ந்துள்ளனர்.

11. ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொருவிதமான நோய்களுடன் உள் வருகின்றனர். வாசியோகத்தில் நோய்கள் என்பதே இல்லை என்பதே சிவசித்தன் கூற்று. உடலில் உள்ள கழிவுகளே நோய்களுக்கு காரணம் என்றும், கழிவுகள் நாம் உண்ணும் அதிகப்படியான தேவையற்ற உணவுகளால் ஏற்படுகிறது என்பதையும் பயிற்சியாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

12. சிவசித்தனின் உணவு விதிமுறைகள் கடுமையானதே. ஆயினும், தேக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதனை விதிமுறைகளாகக் கருதாமல் நெறிமுறைகள் என்றே கருதுவதால், தேகத்தினை தேக உபாதைகளிலிருந்து விடுவிக்கும் உன்னத வழியாக வாசியினை விரும்பி வாசிப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

13. விதிமுறைகளை மீறும்போது உடம்பே அதனைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது உடல் உபாதைகள் மூலம். எனவே, பயிற்சியாளர்கள் உண்மையாகவே, உண்மையாய் இருப்பது, எப்படி? உண்மையினைப் பேசுவது எப்படி? உண்மையை மறைப்பதால் என்ன விளைவுகள் என்று அடிப்படை வாழ்க்கைப் பாடத்தினை தானாக கற்றுக் கொள்கின்றனர்.

14. ஒவ்வொரு தனிமனிதனின் தேக நலனிலும், அக நலனிலும் தனித்தனியாக அக்கறை காட்டும் சிவகுரு சிவசித்தனிடம் உணவு விதிமுறைகள், விதிமுறைகள், பயிற்சிகள் உண்மையாக செய்ய வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினையும் வாசி படைக்கின்றது.

15. தேக ஆற்றல் உணர்வதாலும், நல் எண்ணங்களின் வலிமையினாலும் அகத்தில் இருக்கும் இறை ஆற்றலை மனிதனை உணரச் செய்கிறார் சிவசித்தன். இறைவன் அகத்தில் இருக்கின்றான் என்பது தான் சிவகுரு சிவசித்தனின் கூற்று. இதனை உணர்த்துவது தான் வாசியின் நோக்கமும், சிவசித்தனின் குறிக்கோளும்.

 

 

 

 

Post a Comment