வாசிதேகக்கலையைப் பற்றிய விழிப்புணர்வு

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே   சரணம்”

அனைவருக்கும் வணக்கம். இங்கு இணைக்கப்பட்டுள்ள இரண்டு புகைப்படங்களிலும் தோன்றுவது நான்தான் என்றால் உங்களில் எத்தனை பேர் அதை நம்புவீர்கள், முதலில் உள்ள புகைப்படம் என் சிவகுருசிவசித்தனின் வாசிதேகப் பயிற்சிகளில் இணைவதற்கு இரண்டு வருடத்திற்குமுன் எடுக்கப்பட்டது.

இரண்டாவது புகைப்படம் எங்கள் சிவகுருசிவசித்தனின் வாசிதேகப்பயிற்சிகளில் இணைந்த இரண்டு வருடங்களுக்கு பின் எடுக்கப்பட்டது. வாசிதேகக்கலை மூலம் என் உடற்கழிவகற்றி என் உடல் உபாதைகளை அழித்து என் முகத்திற்கும் அகத்திற்கும் பொலிவு அளித்த எங்கள் சிவகுரு சிவசித்தனின் வாசிதேகக்கலையினால் நான் பெற்ற அனுபவங்களையும் பலன்களையும் இன்றைய காலகட்டத்தில் வாசிதேகக்கலையைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எவ்வளவு அவசியம் என்பது பற்றியும் எங்கள் சிவகுருசிவசித்தன் உத்தரவுப்படி இந்த பக்கத்தில் வரும் நாட்களில் எடுத்துரைக்க போகிறேன்.

நன்றி சிவகுரு“சிவகுருவே சரணம்”

DSC02267இன்றைய மனிதன் விதவிதமான ஆசைகள் என்னும் மாயைகளினால் ஆட்கொள்ளப்பட்டு அதனால் உண்டாகும் பிரச்சனைகளாலும் மன அழுத்தங்களிலும் சிக்குண்டு திணறுகிறான். தன் இன்னல்கள் அனைத்திற்கும் தீர்வு தன் ஆசைகளை விட்டொழித்தலே என்பதை உணராமல் பணமே தீர்வு என்று தவறாக எண்ணி பணக்குதிரை மீதேறி இல்லாத இலக்கை நோக்கி பரபரப்பாக பயணிக்கிறான்.
அந்த பரபரப்பான பயணத்தில் தன் பிரதானமான உடலில் தேவைகளை மதியாமலும் உணர்வுகளை உணராமலும் நேரம் தவறி உண்டும் கிடைத்த நேரத்தில் உறங்கியும் பொருந்தாத பழக்கங்களாலும் உடலின் இயற்தன்மையை சிறிது சிறிதாக சிதைக்கத் தொடங்குகிறான்.
இவ்வாறு இயற்கையின் அருட்கொடையான உடலை ஒரு பொருட்டாக கருதாததால் மனிதன் அடையும் துன்பங்களையும் அதன் தீர்வாக எங்கள் ‎சிவகுரு சிவசித்தன் தானே சுயம்புவாக உணர்ந்த தன் ‎வாசிதேகக்கலை வழியாக உரைப்பன பற்றியும் நாளை முதல் காண்போம்.
தொடரும்
நன்றி சிவகுரு

 

பெயர்          : ராஜேஷ்குமார். B

வாசியோகவில்வம் எண் : 12 12 234

அலைபேசி      : +91 96002 82194

ஊர்              : சின்னமன்னுர்

Post a Comment