முதுகு தண்டு முழுவதும் ஒரே வெப்ப ஆற்றல் அக்னியில் உட்கார்ந்தது போல்

தேகப்பிரபஞ்ச உணர்வுகள்

சுளிமுனையின் உணர்வினை உணரவைப்பது சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


ஓம் சிவகுருவே சரணம்

 5.2.15(வியாழக்கிழமை )

அன்று காலை தூக்கி போட்டு விரலை விரல் நடுவில் வைத்து மற்ற விரல்களை சேர்த்து வைத்து ஒரு பக்கம் கழுத்தை திருப்பி ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும்.

விரல்கள் சேர்ந்ததில் ஓர் அதிர்வு தெரிந்தது கை முழங்கை வரை இழுத்தது. வலது கழுத்து தோல் வழியாக வலது கண் கன்னம் நெற்றி பொட்டு இழுத்தது. வலது முதுகு தண்டில் இடுப்பிற்கு நேர் கவ்விபிடித்து இழுத்தது. வலது பக்கம் கற்பபையில் கவ்வி பிடித்தது.

மறுநாள் காலை 10 மணிக்கு பின் வலது முதுகில் கவ்வி பிடித்து மிக அதிகமாக இருந்தது சிவகுரு. உர்காரமுடியவில்லை உடம்பு எரிந்தது. சில நேரம் மிக அழுத்தமாக கவ்வி பிடிப்பதும் தொடர்ந்து இருந்தது சிவகுரு. 7ம் தேதி மாறிவிட்டது சிவகுரு.

நன்றி சிவகுரு12.2.15(வியாழக்கிழமை )

அன்று குரு இல்லை. நன்றாக மாட்டபோகிறோம் என நினைத்தேன். அதன்படி நடத்திய சிவா முதல்முறை என்பதால் பயத்துடன் பேசினார். மந்திரம் சொல்லிய 2 நிமிடத்தில் முத்திரை சொல்லி விட்டார்.

ஒரு காலை தூக்கி போட்டு கையை மடியில் வைத்து நெற்றி மையத்தை பார்த்து குருவுடைய இரண்டாவது மந்திரம் கூற வேண்டும். முதுகு தண்டு முழுவதும் ஒரே வெப்ப ஆற்றல் அக்னியில் உட்கார்ந்தது போல் இருந்தது. வெப்ப ஆற்றல் மிக அதிகமாக இருந்தது. நெற்றி மையத்தை பிடித்து இழுத்தது. 5 நாட்களாக உடம்பெல்லாம் ஏரிய ஆரம்பித்தது சிவகுரு உங்களை பார்க்கலாம் என்றால் நான் வரும் நேரம் நீங்கள் இல்லை.

DSC02271பொதுவாகவே நீங்கள் வரவில்லை என அவர் கூறினார். போன் பண்ணலாம் என்றால் இவர் குருவை தொந்தரவு பண்ணாதே என்கிறார். வலது கால் முழங்காலுக்கு கீழ் வரை அம்மை பொக்கலம் போல் குட்டி குட்டியாக சிவப்பாக இருந்தது ஒரே அரிப்பு இடது பக்கம் லேசாக இருந்தது. தாங்க முடியவில்லை. முன்பு நீங்கள் கூறியது போல் தேங்காய் எண்ணையை லேசாக சூடுபடுத்தி தேய்த்தேன் சற்று குறைந்தாலும் எண்ணெய் பசை நீங்கியதும் மீண்டும் ஊறல் எடுத்து சிவந்தது ஒரு நாள் தான் சிவகுரு தேய்த்தேன்.

பின் இவர் திட்டி அறிவை அரிவாள் உணர் இது எப்பொழுது எப்படி வந்தது என்றார் தியனாம் பண்ணிய பின் வெப்ப ஆற்றலால் வந்தது. உடம்பு எரிகிறது என்றேன் நான்கு முறை தலைழியாக குளி என்றார் மூன்று முறை எரிச்சல் தாங்காமல் குளித்தேன் குளிக்க குளிக்க அரிப்பு பொக்கலம் மாறியது. உடம்பு எரிச்சல் குறைந்தது சிவகுரு.

நீங்கள் வந்த பின் 4 நாட்களில் நவகிரகத்தில் பூஞ்சாலை அமைத்ததை பார்த்தேன். இந்த எரிச்சல் எங்களை தாக்காமல் இருக்கவே இதை அமைத்தீர்களா? இப்பொழுது தியானத்தில் அமர்ந்தால் அந்த நேரத்தில் வெப்ப ஆற்றலை உணர்ந்து அமர்ந்தால் அந்த நேரத்தில் வெப்ப ஆற்றலை உணர்ந்து மறுநாள் பயிற்சிக்கு பின் மூன்றாம் நாள் மாறுகிறது சிவகுரு.

                                நன்றி சிவகுரு.வாசிதேக பக்தை

ராதாதேவி மணிவண்ணன்

சிந்தாமணி, மதுரை.

Post a Comment