பேராற்றலாய் பலர் வந்து வாசி பயில தனித்தொரு ஜோதியாய்…

சிவசித்த பேரொளியான்

பேராற்றலாய் பலர் வந்து வாசிபயில தனித்தொரு ஜோதியாய்


2 (240)தனி ஒரு மனிதனாய் தன்னை

அறிந்து தானறிந்த உயிர் வாசியால்

தரணியை தழைக்க தானாய் பல

பயிற்சி செய்து தன் உடல் தனில்

நெருப்பின் உச்சமான அக்னியை

தானே உள்ளேற்றி தன் பயிற்சியாளர்களையும்

அவர் தம் கழிவுகளையும் அந்த அக்னி

மூலம் வேரறுத்து

நோயறியா புத்துயிர்களை உருவாக்கி

அவர்தம் உன்னதம் உடலிலே உணர

வைத்து வெப்பமே விருட்சகத்தின் முதல்

வேறாய் வேரூன்றி வையம் தழைக்க

பல நிலைகளில் தன் உண்மையை

பயன்படுத்தி பலர் அறிய

பேராற்றலாய் பலர் வந்து வாசி

பயில தனித்தொரு ஜோதியாய்

தன்னிலை அடைந்து அண்டத்தையும்

பிண்டத்தையும் உய்ய வந்த

#சிவகுருசிவசித்தபேரொளியானாய்  ! 

வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.

Post a Comment