பற்று கொண்டேன் பரந்தாமா உனைப் பற்றியே

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

2 (231)எண்ணம் கொண்டேன் நீயாக!
ஏற்றம் தந்தாய் தானாக!

காரணியாய் நீ இருந்தாய்! காரணத்தை
தேகத்திலே உணர்த்தினாய்!

உனை கண்டுகொள்ள வாசிதந்து
உணர்ந்தறிய திருநாமம் படைத்தாய்!

பரிதவித்த என்னுள் பரமனை காட்டி
அகஆலயத்தில் மெய்இறையை ஆட்கொண்டாய்!

நான் மறித்துப் போவேனே கணப்பொழுதும்
உன் நினைவிழந்தாலே!

காலம் மாற்றியதா? கால் மாற்றியதா?
கருத்தறியத் தேவையில்லை.

சிவசித்தா உன்மேல் அன்பா?
பற்றா? பாசமா? காதலா?

தெரியவில்லை?
அறியமுற்ப்படவுமில்லை!

பற்று கொண்டேன் பரந்தாமா உனைப் பற்றியே
பண்பு வழியில் மெய்யுணர்த்தி அகத்தே பற்றிட்டாய்!

எள்ளளவும் கள்ளமில்லை எண்ணிய எண்ணமதில்
ஏற்றிய வாசிதனில் தன் நாதா…….,

ஏங்கியே நானிருக்கிறேன் உன் நிழலாய் வந்தடையவே
தரிசனம் காண தவித்துக் கொண்டிருக்கிறேன்!

உன் காலாலே என் காலையும் விடியுதே!
உன் காலாலே என் நாட்களும் நீளுதே!
உன் காலாலே அன்பும் உணருதே!
உன் காலாலே தென்தமிழும் அறியுதே!
உன் காலாலே அகமதனை உணர்ந்தேன்!
உன் காலாலே என் படைப்பு நீயாக உணர்ந்தேன்!
உன் காலாலே மெய்பிறவி கொண்டேன்!
உன் காலாலே சரணாகதி அடைந்தேன்!
உன் காலாலே மோட்சம்தனை அடைவேன்!

எண்ணாத உத்தமமான வாழ்வளித்த உண்மையே!
ஏற்றுவேன் என் பிறவிப்பயன் நீ உரைத்த வழியிலே!

காலம் காட்டிய கருணையே!
உன் கருணையால் விளைந்த வாழ்வையே
சமர்ப்பிப்பேன் உன் பாதத்திலே சிவசித்தனே!!!

சிவசித்தனே உண்மை!
வாசியே மெய்!

நன்றி சிவகுருவே

Post a Comment