பயம் அறுக்கும் பரவொளியான்…

சிவசித்த பேரொளியான்

மருத்துவரும் வந்து பயிலும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் 


பயம் அறுக்கும் பரவொளியான சிவசித்தன் பேரொளியான்

வாலிபப்பருவமதில் சுயஇன்பம் நாடியே!

சுக்கிலத்தை பாழ்செய்து காமமதின்

போதையிலே! தள்ளாடி உயிர்சக்தியதை

இழக்கின்ற நல்புத்தியில்லா வாலிபனே!

உம்எதிர்காலம் வேதனையே! வேதனையே!

நித்தம்நித்தம் விந்துதனை வீணாக்கிபின்

நொந்துநொந்து வேதனையில் வெட்கியே

தலைகுனிந்து யாரிடம் சொல்வதென?

எவர்தீர்ப்பார் இவ்வேதனையை? என்றெண்ணி

ஏங்கியே! கலங்குகின்ற இளைஞர்களே!

வாழ்விழந்த மனிதனுக்கும் புதுவாழ்வு

தருகின்ற புண்ணியர் இருக்கின்றார்

பூவுலக மாமணியாய்! மாமதுரை

பதிதன்னில் நமைஎல்லாம் காக்கவே!

குருபீடம் தாங்கியே சிந்தாமணிதனில்

சிவசித்தன் அருள்கின்றார் சிவசித்தன்

பதம்பணிந்து வாசிகலை கற்றாலே

எதிர்மறை எண்ணமெல்லாம் அடியோடு

தீர்ந்துவிடும். சிந்தனையும் தெளிவாகி

சுழுமுனையும் செயல்படுமே! வாழ்க்கையதை

வளமோடும், குன்றாத நலமோடும்,

குறைவின்றி வாழ்ந்திடலாம். சத்தியமே! சத்தியமே!

சிவசித்தன் உயிர்க்கலையால் இவையத்துணையும்

சாத்தியமே! சாத்தியமே! 

நவவாசல் கொண்டுள்ள தேகமெனும்

உடலதினில் இருவாசல் அதன்வழியே

திருவாசியை உள்ளேற்றி சிவசித்தன்

அருளிய ஆசனத்தை முறையோடு

மூவிரண்டு மாதமதில் செய்தாலே

போதுமய்யா! தீராத பிணி தீர்ந்து

தெய்வமதை உணர்ந்திடலாம்!தெய்வமதை தேடி! தேடி! புறம்தன்னில்

அலையாதே! ஆலயத்தை நாடி நாடி

அவனியிலே தேடாதே! கடவுளெனும்

பேரொளியை கட்டிடத்தில் இல்லையப்பா!

உள்ளமதில் இருக்குதப்பா வாசியெனும்

அருந்தெய்வம்! அத்தெய்வம் தனை

உணர்வதற்கு சிவசித்தன் உயிர்க்கலையை

பயில் மனமே!2 (245)

நித்தம்! நித்தம்! பேசிபேசி பெற்ற

பலன் ஏதுமில்லை! நாள்தோறும்

மணித்துளிகள் சிலநேரம் கண்இமைமூடி

நிசப்தமான நிலை அமர்ந்து உம்முள்ளே

இயங்குகின்ற வாசிதனை நேசிப்பாய் நல்மனமே!

நேசித்த வாசிதனை சிவமாக தொழுமனமே!நோயதிலே நொடிதோறும் நோவுகின்ற

மானுடரே! மருந்ததனை உட்கொண்டு

உடல்காக்கும் உயிரணுக்களைக் கொல்லாதீர்!

மரணத்தின் வாயிலதை தாமாக தேடாதீர்

புறம்அதிலே தேடாதே உயிர் காக்கும்

மருந்ததனை அகம்தன்னில் தேடிடய்யா!

வாசியெனும் அருமருந்தை வாசிதனை

மெய்யாக உணர்வதற்கு ஸ்ரீவில்வதேக

குருகுலத்தில் இக்கணமே இணைமனமே!

சிவகுருவின் திருவடியை நாள்தோறும் பணிமனமே!சிற்றின்ப சேற்றிலே சிக்கியே! தவிக்கின்ற

சீர்கெட்ட மனிதர்களே! பேரின்பம் தருமென்று

போதைவழி போகாதே! மாயையான அவ்வழி

சென்று மரணமதை நாடாதே! மனமாற்றம்

தருகின்ற மகத்தான கலையான சிவகுருவின் வாசிகலை

கற்றறிந்து வருங்காலமதை வென்றிடுவோம்!சிவகுருவின் திருஉருதனை நேர்பார்த்து

சிரம் அதனை நேர்நிமிர்த்தி

தலைதனை தரைப்பார்த்து

கரமிரண்டை இணைசேர்த்து கண்இமைமூடி

இமைகளின் மையமதில் விரல் குவித்து

சிவகுருநாதரைப் பணி மனமே!அரைகுறையாய் ஆசனத்தைக் கற்றுக் கொண்டு

ஆசான் என்று எண்ணுகின்ற பேதைகளே!

அறிவதனை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது

என்கின்ற எல்லாமும் ஆன ஈசனாரின்

அருள்பெற்ற எம் குருவான சிவசித்தனின்

உயிர்க்கலை அறிந்து அகம் தன்னில்

இறைவனைக் கண்டிடலாம் மானுடனே!

Post a Comment