நற்பலன்கள் கிடைப்பதற்கு காரணம் என்ன?

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

நமது செயல்களில் யாரும் குறுக்கீடு செய்யாமல் இருந்தால் நாம் எண்ணிய செயல்களை நமது மனம் போன போக்கில் நிறைவேற்றிக் கொள்ளலாம். நமது செயல்களுக்கான பலன் நல்லவை ஆகட்டும் அல்லது கெடுதல் தருபவை ஆகட்டும் நம்மையே வந்து சேரும். நாம் செய்த செயல்களுக்கான பலனை நமக்கு சரியான நேரத்தில் சரியான படி பெற்றுத்தர நவக்கிரகங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளதாக நமது முன்னோர்கள் உறுதிபட நம்பினார்கள்.1 (3235)

இந்த நவக்கிரகங்களின் செயல்பாடுகள் இரண்டு நபர்களின் செயல்பாடுகள் நடக்கும் பொழுது எந்த வித குறுக்கீடும் செய்வது இல்லை. அந்திமக் காலம் வந்து விடுகிறது. உடல் மாற்றத்திற்கான நேரம் குறிக்கப்பட்டு விடுகிறது. எமதர்மனின் கட்டளைப்படி எமதூதர்கள் தங்கள் பணியை செய்ய ஆரம்பித்து விட்டால் நவக்கிரகங்கள் அனைத்தும் விலகி நின்று எமதர்மனின் பணிகள் செய்ய உறுதுணையாய் நிற்கும். மேல் மட்ட உத்தரவு வந்த பிறகு கீழ் மட்ட உத்தரவுகள் எல்லாம் செயல் இழப்பது போல.

சிவகுரு சிவசித்தன் அவர்கள் நாடி பார்க்கும் முன்பு வரை கெடுதல் பலன்களையே பெற்று வந்த நமக்கு நற்பலன்கள் கிடைப்பதற்கு காரணம் என்ன? நவக்கிரகங்களுக்கு சிவகுரு சிவசித்தன் இட்ட உத்தரவே காரணம்.

சிவகுரு சிவசித்தன் காட்டும் இன்றைய வாழ்வியல் முறையை கடைபிடிப்பவர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்வது இல்லை. சிவகுரு சிவசித்தனின் உத்தரவை ஏற்று வாசியோக அன்பர்களுக்கு நவக்கிரகங்கள் நன்மை மட்டுமே செய்கின்றன. உடல் மாற்றமோ வாசியோக அன்பர்களின் விருப்பபடி சிவசித்தனின் அனுமதியின் பேரிலேயே நடைபெறுகின்றது. எமதர்மராஜனின் ஏட்டிற்கு இங்கு வேலை என்பது இல்லை.

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Post a Comment