செலவழித்தும் உடலும் நலமடையவில்லை, மனமும் அமைதியடையவில்லை.

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்”

மனிதன் ஒவ்வாத உணவுவகைகளை பொருந்தாத நேரத்தில் உண்டு உடலின் தன்மையை சிதைக்கத் தொடங்கியதன் விளைவு நோய் என்னும் உபாதைகள் மற்றும் அதனால் உண்டாகும் வேதனைகளால் அவதியுறுகிறான். ஏற்கனவே பிரச்சனைகளின் மன அழுத்தத்தில் சிக்கியிருந்த மனிதன் உடலின் வேதனைகளும் சேர விழி பிதுங்கி நிற்கிறான்.

உடலின் வேதனைகளைத் தீர்க்க மருத்துவமனைகளையும், மன அழுத்தங்களிலிருந்து விடுபட கோவில்களையும் நாடுகிறான்.
தீர்க்கவே முடியாது என்று ஆணித்தரமாக தெரிந்தும் சிகிச்சை அளிக்கிறேன் பேர்வழி என்று பணம் பறிக்கும் மருத்துவ உலகை என்னவென்பது?. தன்னையே உணராதவர்களால் பராமரிக்கப்படும் கோயில்களில் மன அழுத்தங்களுக்கான தீர்வைத் தேடினால் கிடைக்குமா?
கோவில்களைப்பற்றியும், மருத்துவமனைகளைப் பற்றியும் எங்கள் ‎சிவகுருசிவசித்தனின் கருத்துக்களை அடுத்த பதிவில் காண்போம்…
தொடரும்
நன்றி சிவகுரு.“சிவகுருவே சரணம்”

மருத்துவமனைகளும் கோவில்களும் பொருளீட்டும் வியாபார ஸ்தலங்களாக மாறியிருக்கின்றன. சேவை மனப்பான்மை இல்லாத பணம் ஒன்றே குறிக்கோள் என்ற மனப்பாங்குடன் உலாவரும் மருத்துவர்களிடம் தன்னிடம் தீர்வு வேண்டி வருபவர்களின் நோய் தீர வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி       எதிர்பார்க்க       முடியும்?DSC02264
திரையரங்குகளில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்பது போல இறையைத் தரிசிக்க வரும் மக்களிடம் கட்டணப்பிரிவு இலவசப்பிரிவு என்று பாகுபாடு வகுத்திருக்கும் கோவில்களில் உண்மை எங்கேயிருக்க முடியும்?
தொடரும்

நன்றி சிவகுரு.“சிவகுருவே சரணம்”

இதுவரை பணமே அனைத்திற்கும் தீர்வு என்று எண்ணிய மனிதன் தன் இன்னல்களை தீர்க்க வேண்டி கோவில்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் நம்பிக்கை வைக்கிறான்.
உடலின் பிணி தீர்க்க வேண்டி மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளும், மனஅமைதி வேண்டி நடத்தப்படும் பூஜை புனஸ்காரங்களும், மருத்துவர்களும் பூசாரிகளும் தங்கள் வளத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான உத்தியே என்று உணராமல் அல்லும் பகலும் உழைத்து சேர்த்த பணத்தை தண்ணீராக செலவிடுகிறான்.

செலவழித்தும் உடலும் நலமடையவில்லை, மனமும் அமைதியடையவில்லை. மேலும் மன உளைச்சலுற்று விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்படுகிறான். சிக்கல் மேலும் இடியாப்பச் சிக்கலாகிறது.
இவ்வாறு இருட்டுக்கடலில் திசைதெரியாமல் தத்தளிக்கும் கட்டுமரம் போல பிரச்சனைகளுடனே வாழ்ந்துவரும் மனிதனை கரையேற்ற வானில் ஒளிக்கீற்றாய் நம்பிக்கை நட்சத்திரமாய் உதயமாகியிருக்கும் எங்கள் ‎சிவகுருசிவசித்தன் மனிதனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணம் என்னவென்ற கேள்விக்கு ஒரேயொரு ஒற்றை சொல்லையும் அதற்கு தீர்வு என்ன என்ற கேள்விக்கும் ஒரெயொரு ஒற்றை சொல்லையும் பதிலாக உரைக்கிறார். அந்த பதில்கள் என்னவென்பதை அடுத்த பதிவில் காண்போம்.
தொடரும்
நன்றி சிவகுரு.

Post a Comment