ஸ்ரீ வில்வம் யோக மையம், தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள சிந்தாமணியில், 1996ம் ஆண்டு முதல் சிவகுரு சிவசித்தன் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

Sivasithan 898
மனிதன் நோய்கள் இன்றி, உடல் ஆரோகியத்துடனும், நல் எண்ணங்களுடனும் வாழ்ந்து, மனிதன் தனுக்குள் உள்ள இறை ஆற்றலை “சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை” மூலம் உணர்த்துவதே சிவகுருவின் குறிக்கோள் ஆகும்.

 

எளிய மக்களுக்கும் இந்த அறிய சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை சென்றடைய வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் தான், எந்த வித பாரபட்சமின்றி, வியாபார நோக்கம் ஏதுமின்றி, சிவகுரு சிவசித்தனின் விதிமுறைகள் மற்றும் உணவு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரும்பி வரும் நபர்கள் மட்டும் தான்  சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையை கற்க சேர்த்துக் கொள்ளப் படுகிறது.

 

இம் மையத்தில் பயிற்சியில் சேர வேண்டுமெனில் தினமும் காலை04.30  மணி முதல் 6.௦௦ மணிக்குள் மையத்திற்க்கு நேரடியாக வந்து தகவல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

Tagline – குறிக்கோள்:

     ‘அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது’

இதுவே சிவகுரு சிவசித்தனின் குறிக்கோள் ஆகும்.

தேகத்தின் அறிவை, வாசியோகம் கற்று அதன் மூலம் தேகத்தில்  ஏற்படும்,

உணர்வுகளை, அறிந்து(உணர்ந்து), கற்பதே சிறந்தது என்கிறார் சிவசித்தன்.

 

Logo – சின்னம்:

     ‘படைத்தவன் தன்னையே பார்’

circumference-logo

values –

Equality – அனைவரும் சமம்

No partiality – பேதம் என்பது இல்லை.

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையை கற்றுக் கொள்ள வரும் அனைவரையும் சிவகுரு சிவசித்தன் சமமாகக் கருதிகிறார். மனிதர்கள் அனைவரையும் ஆன்மாக்களாக கருதுகிறார். எனவே தான் மனிதர்களிடையே பேதங்கள் எதுவும் அவர் காண்பதில்லை.

மனித உடல் படும் துயரினைக் கண்டு துயர் போக்க கருதுகிறார்.

மனிதனில் உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன், சாதி, மதம், அந்தஸ்து, பதவி எதுவும் முக்கியமாக நினைப்பதில்லை சிவகுரு.

மனித தேகம், ஆன்மாவுக்கு கருவாகிய உயிர்  படும் துயர்களை களைவதே தனது உயரிய நோக்கமாக செயல்படுகிறார் சிவகுரு சிவசித்தன்.

 

 

Post a Comment