சிவசித்தனின் வரலாறு :

Sivasithan 010

                   1977-ஆம் வருடம் மார்ச் மாதம் 30-ம் நாள், இயற்கை ஓர் இனிய நிகழ்வினைத் சந்தித்தது, மதுரையில் வாழும் S.நாகராஜன், செல்லமாள் தம்பதியருக்கு, சரவணகண்ணணாய் பிறந்த குழந்தையை கண்டு, பூரித்தது, குழந்தைப் பருவம் தொட்டு, இளமைப்பருவம் வரையிலும், ஏன் நாளது தேதி வரையிலும் இயற்கை புடைசூழ, செயற்கையாக வாழும் மனிதர்களை விட்டு விலகி தனிமையிலே தனித்திருந்தாலும், எல்லோர் மனத்திலும் இடம் பெற்றுள்ள தனிமனிதராகத் தான் செயல்படுகிறார், சரவணகண்ணாக இருந்து, N.கோபிகண்ணன் எனும் பெயரிடப்பட்டு தற்போது, சிவகுரு சிவசித்தன் எனும், நாமம் கொண்டுள்ளார்.

சிவகுரு சிவசித்தன், தமது வளரும் பருவத்திலேயே தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் நடவடிக்கைகளையும், பேச்சுகளையும் உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார். எல்லா மனிதர்களும் இடத்துக்கு தகுந்த மாதிரி பேசுவதும், யாரிடமும் உண்மை இல்லை என்றும்,இயல்பாக யாரும் பழகவில்லை என்றும், உண்மையினை யாரும் பொருட்படுத்தவில்லை என்றும், உண்மையாகத் தாம் பேசுவதையும், உண்மையினை எடுத்து சொல்வதாலும், தான் தனிப்பட்டே இருந்து வந்துள்ளதாகவும் சிவகுரு சிவசித்தன் தெரிவிக்கிறார்.

எந்த ஒரு விஷயத்தையும் பூசி மொழுகாமல் நடப்பினை (fact) தெரிவிக்கும் முறையினால், இயற்கையே இவருக்கு எந்நேரமும் பாதுகாப்பு அளிப்பதாக பகிர்கிறார் சிவகுரு சிவசித்தன்.

      இவர் தனது பள்ளிப் பருவத்தை,

P.N.U.A.P.T. துரைராஜ் மேல்நிலை பள்ளியிலும்,

கல்லூரி பருவத்தை தியாகராஜர்  கலைக்கல்லூரி, தெப்பக்குளம்,

மதுரையிலும் பயணித்துள்ளார்.

 

இவர் 3.7.2000 அன்று, மதுரை பாலையம்பட்டி, நாடார்கள் உறவின்முறை A.P.T துரைராஜ் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக சேர்ந்து, பணிபுரிந்துள்ளார்.

இவர் பணிபுரிந்த காலத்திலேயே வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்ததாகவும், தான் சுயம்புவாக அறிந்த வாசிதேகக் கலையினை  “ நாடி ” பார்ப்பதன் மூலம், மாணவர்களுக்கு “நாடி” பார்க்க ஆரம்பித்து, மெதுமெதுவாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு நாடி பார்க்க ஆரம்பித்து,

மக்கள் சேவையின் பொருட்டு,

டிசம்பர் 2011 முதல் தன்னுடைய ஆசிரியர் பணியினை துறந்துள்ளார்.

தனது முழுநேரமும் மக்களின் சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, பல குறைகளுடன் தன்னை நாடி வரும் மானுடர்களை சரி செய்வதை தனது வாழ்நாள் லட்சியம் என்கிறார் சிவசித்தன்.

சிவகுரு சிவசித்தன், இந்த வாசியோகக் கலையினைப் பற்றியோ, தியான முத்திரை பயிற்சி பற்றியோ, புத்தகம் மூலமாகவோ, வேறு யார் மூலமாகவோ எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்றும், தானே சுயமாக இப்பயிற்சிகளை அறிந்து கொண்டு, மக்களுக்கு, நோயினால் துயரும் மக்களுக்கு சேவை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

31.5.2004-ல் இவருக்கு திருமணம் இனிதே நடக்க, அதனை தொடர்ந்து ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையுடனும், தனது வாழ்க்கை பயணத்தை, தொடர்கிறார்,

தமது மக்கள் பணியில் தொடர்ந்து ……………..

 குறிப்பு:

 1. உண்மையாக இல்லை என்பது :

வாசியோக பயிற்சியில் உணவு விதிமுறைகளும், பயிற்சிகளும் தினமும் விடாமல் பின்பற்றுவது கடினமே ஆயினும் உண்மையாகக் கடைபிடித்தால் தேக நலன் பெறுவது உறுதி என்பதை வாசியோகப் பயிற்சியாளர்களின் அனுபவமே சான்று. இருப்பினும் உணவு விதிமுறைகளில் மற்ற விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறும் பொது, பயிற்சியாளர்கள் உண்மையைக் கூறத் தவறுவதும், தயங்குவதும் கண்கூடாக காண முடிகிறது. தமது தேக நலனுக்காக வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவதும், அதன் உண்மையினைக் கூட சிவகுரு சிவசித்தனிடம் கூறி தீர்வு பெறவும் தயங்குகின்றனர். தமது தேக நலனில் அக்கறை கொண்டுள்ள சிவகுருவிடம் கூட மக்கள் உண்மையாக இருப்பதும், கடின உண்மையே பேசுவதும் இல்லை. என்பதும் வாசியோகப் பயிற்சியாளர்களின் அனுபவத்தில் இருந்து கண்டுகொள்ள முடிகிறது.

 2. இயற்கையின் பாதுகாப்பு :

வாசியோகப் பயிற்சியினை தினமும் தவறாமல் செய்யும் பயிற்சியாளர்களுக்கு, விதிமுறைகளை உண்மையாகப் பின்பற்றுபவர்களுக்கு இயற்கையோடு, இயைந்த வாழ்வினை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மழை, பணி, வெயில், குளிர் என இயற்கை எந்த பாதிப்பும் செய்வதில்லை. இயற்கையே தேகத்தின் பாதுகாக்கவும் செய்கிறது. மழைக் காலங்களில் கூட தினமும் மழையில் நினைந்து மையத்தில் பயிற்சி செய்யும் பயிற்சியாளர்கள் இதற்கு சான்று. ஒன்றிரண்டு வருடம் தொடர்ந்து பயிற்சி செய்யும் பயிற்சியாளர்களுக்கே இயற்கை அன்னை பாதுகாப்பளிக்கும் பொது, சிறுவயது, முதலே வாசியினை உணர்ந்து தொடர்ந்து பயிற்சி செய்துவரும் சிவசித்தனுக்கு இயற்கை பாதுகாப்பதில் வியப்பேதும் இல்லையே!

 3. வாசியோகக் கலை தனிநபர் கலையே :

சிவகுரு சிவசித்தன் வாசியோகக் கலையினை தானாய் உணர்ந்து கற்றுத் தருவதாக கூறுகிறார். வாசியோகப் பயிற்சியில் சேறுபவர்களை தனி தனியாக ‘நாடி’ பார்த்து, அவரது உடல் தன்மைக்கேற்ப, நாடிகளின் செயல் குறைபாடுகளைக் தானாய் கண்டறிந்து தனி தனியே பயிற்சிகள் அளிக்கிறார் சிவசித்தன். வாசியோகப் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவரும் இதை அறிவர். பயிற்சிகள் மூலம் ஒவ்வொருவர் பெரும் உணர்வுகளும் தனித் தனியே, இதையும் ஒவ்வொரு பயிற்சியாளரும் நன்கு அறிவீர், வாசியோகப் பயிற்சியாளர்களின் கூட்டத்தில் பயிற்சியாளர்கள் தமது அனுபவங்களை பகிர்வதன் மூலம் தமது உடலில் உள்ள நோய்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறுவதையும், மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களையும் தானாய் உணர்கின்றனர். அதனை வீடியோவிலும் பதிவு செய்து வருகின்றனர் தாம் பெற்ற நலனை பிறருக்கும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்துடன்.

 4. ‘தானாய் உணர்ந்த கலை’:

சிவகுரு சிவசித்தன் வாசியோகக் கலையினை எந்த ஒரு புத்தகம் மூலமாகவோ, வேறு எந்த தனிநபரிடமோ கற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறார். ஒவ்வொருவருக்கும் தனிதனி பயிற்சிகள் அளிப்பதை பார்க்கும்போது எந்த ஒரு புத்தகத்திலும் இல்லாத ஒரு நிலை பயிற்சியும், பயிற்சி கற்றுக் கொடுக்கும்போது அமர்ந்து செய்யும் நிலை மாறுபடுவதும், ஒவ்வொருவரும் உணர்ந்து சொல்லும் அனுபவங்களும் வெவ்வேறு ஆகவும் உள்ளது.

Post a Comment