முக்காலம் அறியும் வண்ணம் எடுத்துரைத்தனரா?

சிவகுரு

பஞ்ச பூதங்களின் மகத்துவத்தை அரிய வைத்து உணரவைப்பதே சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


சிவகுருவே சரணம்!

சிவசித்தனின் வான்வாசி  பாடல் 01

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

1 (1589)காலையிலும் மாலையிலும்
காலை உள்ளேற்றி!
கழிவுகளை வெளியேற்றி!
சிவகுரு வகுத்த உணவுமுறை பின்பற்றி!
ஒன்றரை மணிக்கு ஒருமுறை நீர் உள்ளூற்றி!
தவறாது சிவசித்த மந்திரந்தனை மனதால் மெருகேற்றி!
நாளும் கணப்பொழுதும் நம் உடலின் உயிரைப் போற்றி!
வாழ்ந்திடுவோம் நோயின்றி!
வாழும் காலம் வரை

சிவசித்தனின் வான்வாசியின் ஆசியால்… 

சிவசித்தனின் வான்வாசி பாடல் 02

 

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

அக்காலந்தொட்டு இக்காலம் வரை
எம் சிவசத்த வாசிக்காலை எவரேனும்
முக்காலம் அறியும் வண்ணம் எடுத்துரைத்தனரா?
தன் கால் கொண்டு தானே
காலை அறிந்து உணர்ந்து
பிறருக்கு காலை தானே உணர்த்தி
தன் காலத்திற்குள் இக்காலை
காலத்தே உலகம் பரப்பிட
வந்த காலநாதனே சிவசித்தனே!வாசியோக பக்தன்

சுந்தர் சின்னமனூர்

Post a Comment