சிவசித்தனின் வாசியோகக்கலை

சிவசித்தன்

சிவகுருவே சரணம்

சிவசித்தனின் வாசியோகக்கலை

மக்கள் பலவிதமான நோய்களால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பப்படுவதையும் இந்நோய் தீர்க்க பல வித யோகமுறைகளையும், சித்த முறைகளையும், மருத்துவ முறைகளையும் கையாண்டும், நோய் நீங்காமல் நோய் புதுப்புது வடிவில் உருவெடுப்பதும், நோயின் தீவிரம் வலுப்படுப்படுவதையும் கண்ட சிவகுரு சிவசித்தன் மக்கள் துயர் தீர்க்க அவர்களுக்கு உகந்த வழியினைக் காட்ட வேண்டும் எனத் தீர்மானித்ததின் முடிவே “வாசியோகக் கலையாகும்.”
நீண்ட காலமாக நோய் தீராமல் கஷ்டப்படும் மக்கள் தங்கள் துயர் தீர கோவில் பூஜை,பரிகாரம் என பல பல இடங்களில் அலைந்தும் நோய் தீராமல் அவதிப்படுவதைக் கண்ணுற்ற சிவகுரு சிவசித்தன். இம் மக்களது நோய் தீர்க்கும் இடம் ஒன்றை தாம் நிர்மாணிக்க வேண்டும் என முடிவேடுத்ததின் காரணமாக அமைந்தது தான் “ஸ்ரீ வில்வம் யோகா மையம்” ஆகும்.
ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தன் கற்றுத்தரும் வாசியோகக் கலையினால் இது நான் வரையிலும் நோயினால் துன்புற்று மனிதன், பல இடங்களுக்கும் சென்று நோய் தீராமல் அவதியுற்று மன உளைச்சல்களுக்கு ஆளாகிய மனிதன், உடலில் உள்ள நோய் நீங்கி, உடல் நலம் பெறுவதைக் காண்கிறான். உடல் நலம் பெற்று வரும்போது உடலினுள் உள்ள தேகத்தை உணர்கிறான்.1 (1588)

தேகத்தின் உணர்வால் அகத்தை அறிந்து உண்மை நிகழ்வுகளை எண்ணி வாழ ஆரம்பிக்கிறான். அதன்பின் சிவகுரு சிவசித்தன் சொல்லும் “மன எண்ணம் மற்றவன் எண்ணம்”  என்ற கூற்றின் படி உடலில் உள்ள கழிவோடு மனதையும் அழித்து,  மனத்துயர் நீங்கியும், தேகத்தில் அகத்தை உணர்ந்து வாழ்கிறான்.

உடலும் தேகமும் அகமும்  அமைதி பெறுவதை உணர்கிறான். தொலைந்து போன நிம்மதியான தூக்கத்தை மீண்டும் பெறுகிறான்.
நோயின் காரணமாக மனிதன் இறப்பு அடைவதும், இறப்பு வரையிலும், மனிதன் நோயினால் மிக்க துன்பம் அடைவதையும், நோய் தீர வழியில்லாமல் அல்லாடும் நிலை மாற்றவே, சிவகுரு சிவசித்தன் சுயம்புவாக உருவாக்கிய உயிர்க்கலை ஆகும் இக்கலை.
மனிதனது உடல், தேகம், அகம் , எண்ணம்,ஆத்மஉயிரையும் மேம்படுத்தி, மனித பேராற்றலையும் உணர்த்துவதே சிவகுரு சிவசித்தனின் நோக்கமாகும். மனிதனுக்காக உருவாக்கப்பட்டதும், மனிதகலையின் மகத்துவத்தை உணர்த்துவதும் “சிவகுரு சிவசித்தனின் வாசியோகக்கலை”.
வாசியோகக்கலை மதம் சார்ந்தது அல்ல. மனிதம் சார்ந்தது.
மனிதர்கள் உயர்வு தாழ்வு இல்லை இங்கே.
அனைவரையும் சமமாய் காண்கிறார், சிவகுரு சிவசித்தன்.
இதுவே ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் வெற்றிக்கான அடித்தளமாகும்.

Post a Comment