சிவகுரு வணக்கப் பாடல்|வாசிதேகம்

சிவகுரு

மருந்தில்லா புது மனிதனாக வாழச் செய்யும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


சிவகுருவே சரணம்!

“சிவகுரு வணக்கப் பாடல்”

2 (244)

ஓம் அரவங்க மேனியரே! ஆதியான சிவகுருவே!

ஓம் இலந்தை மரத்தடியிலே! இறையான ஈசனோடு

ஒன்றெனக் கலந்துள்ள ஓம்கார சிவகுருவே!

ஓம் உடலோடு உட்புகுந்து உள்ளாடும் வாசிபோல

எம்முள்ளே உறைந்திட்ட உத்தமராம் சிவகுருவே!

ஓம் ஐயனே! மெய்யனே! உம்திருவடி நிழலிலே

மறுமையிலும் வணங்குதற்கு வரமொன்று தருவீரே!

வற்றாத ஆழியிலே! சுழன்றாடும் கயல்போல

பற்றறுத்த பரமனவர் கழுத்தினிலே நெளிந்தாடும்

நாகம் போல! உளமதையே

நிலைநிறுத்தி உளநாவால் சிவகுருவின்

மந்திரத்தை செப்புகின்ற பொன்னான தருணமதிலே

நம்பிண்டமது வளைந்தாடி வளைந்தாடி

வணங்குதய்யா! சிந்தாமணி சிவகுரு சிவசித்தனாதனையே!சிவசித்தனின் பக்தன்

சண்முகப்பண்டியன்

Post a Comment