சிவகுரு சிவசித்தனை நாடிவருவதன் காரணம் …

சிவசித்தன்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இவைகளை அறவே மாற்றும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


சிவகுரு சிவசித்தனை நாடிவருவதன் காரணம் 

மனிதன் தனது நோய்களுக்கான நிரந்தர தீர்வினைத்தேடி பல இடங்களிலும் அலைந்து நிவாரணம் கிடைக்கப் பெறாமல், இம்மையத்தில் ஏற்கனவே பயிற்சி செய்து வரும் பயிற்சியாளர்கள் மூலம் இம்மையத்தினைப் பற்றிய தகவல்களையும், சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலையினை கேள்விப்பட்டும், இம்மையத்தில் தனது நோய் தீர வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்து சேருகின்றனர்.

பயிற்சிக்கு வரும் புதிய நபர்களுக்காக, சிவகுரு சிவசித்தன் வாசியோகக்கலை குறித்த ‘விழிப்புணர்வுக் கூட்டம்’ நடத்துகிறார். அக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பயிற்சியாளர்கள் தமது நோய்களையும், தாம் எடுத்துக் கொண்ட மருத்துவ முறைகளையும், எதிலும் தீர்வு கிடைக்காது நோய் முற்றிப்போன நிலையிலும், தீர்வு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையிலும், நோய்க்காக எடுக்கப்பட்ட மருத்துவம் பக்க விளைவுகள் ஏற்படுத்திய விதத்தினையும் கூறி மன உளைச்சலுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

தனது துன்பங்களுக்கு தீர்வு வேண்டியே சிவகுரு சிவசித்தனின் வாசியோகக்கலையினை இங்குள்ள பயிற்சியாளர்கள் மூலம் அவர்களது அனுபவங்களை கேள்விப்பட்டும் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டும் வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

2 (242)இன்னும் பலர், பற்பல யோகமுறைகளையும், உடற்பயிற்சி, நடைபயிற்சி என அனைத்து வழிவகைகளிலும் சென்றும் முயற்சித்தும், விடை காணாமல், வாசியோகக்கலையின் சிறப்பினைக் கேள்விப்பட்டு, நம்பிக்கையுடன் வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இன்னும் பலர் பல கோவில் குளங்கள், பூஜைகள், உபவாசங்கள், பரிகாரங்கள், வேண்டுதல்கள் செய்தும் தமது உடல் நோய்கள் தீராமல், சிவகுரு சிவசித்தனிடம் தனது நோயினின்று தன்னைக் காக்கும் படியும் கோரிக்கை வைக்கின்றனர்.

இம்மையத்தில் பயிற்சி செய்து வரும் பயிற்சியாளர்கள் அனைவருமே, இங்கு மையத்திற்கு வரும் முன்பு பல மருத்துவ முறைகள், பல யோக முறைகள், பல கோவில்கள் சென்று, எதிலும் தீர்வு கிடைக்காமல் வந்து சேர்ந்து, இன்று தனது உடல் கழிவுகள் (நோய்கள்) நீங்கி, உடல் நலம் பெற்று, தனது அன்றாட வாழ்க்கையில் தனது வழக்கமான செயல்களை சுறுசுறுப்புடன், சோர்வின்றி, மனக்குழப்பத்தை அழித்து, துன்பம் ஏதுமின்றி செயலாற்றி, தொந்தரவுகள் இல்லாத இரவுத் தூக்கம் பெற்று, நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

தனித்தனியாக வந்த பயிற்சியாளர்கள், வாசியோகப்பயிற்சியின் பயன்கள் அனுபவித்து, உணர்ந்த பின், தனது மனைவி/கணவன் உடன் மற்றும் தனது குழந்தைகளையும் அழைத்து பயிற்சிக்கு வருகின்றனர்.

இதனை நேரடியாகக் கண்ணுற்றும், கேள்வியுற்றும் சரியான தகவல்களைப் பெற்ற பின்னரே இம்மையத்தில் பயிற்சியில் சேர மக்கள் விரும்பி நாடி வருகின்றனர்.

Post a Comment