சிவகுரு சிவசித்தனின் தனித்துவம்…

சிவசித்தனின் தனித்துவம்

நாடியின் தன்மை அறிந்து பயிற்சி அளிப்பது சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


சிவகுரு சிவசித்தனின் தனித்துவம் 

சிவகுரு சிவசித்தனின் வாசியோகக்கலை தனித்துவம் வாய்ந்த கலையாகும்.

வாசியோகக் கலை பயிற்றுவிக்கும் முறையில் கூட அவரது தனித்துவம் காணலாம்.

 

 1. பயிற்சிக்கு சேர விரும்புபவர்கள் முதலில் அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.
 2. வாசியோகக்கலை குறித்து நடத்தப்படும் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இது சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலையினைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.
 3. சிவகுரு சிவசித்தனின் பயிற்சி முறைகள், விதிமுறைகள் தெரிந்து கொண்டபின்பு, விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளவேண்டும்.
 4. பின்னர் விண்ணப்பத்தினை உரிய தகலகளுடன் சமர்ப்பித்து நாடி பார்க்கும் தேதியினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 5. சிவகுரு சிவசித்தன் அவர்களால் ‘நாடி’ பார்த்த பின்னர் அவரது உடல் தன்மைக்கேற்ப, சிவகுரு சிவசித்தன் பயிற்சிகள் வழங்குகிறார்.

 

 1. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பயிற்சிகளும், பயிற்சிகளின் எண்ணிக்கையும் இருப்பதும், தனித்துவம் வாய்ந்ததே.DSC02272
 2. பயிற்சியாளர்களுக்கு தனித்தனியாக ‘வருகை அட்டையில்’(Attendance) வருகை நேரம் தினமும் பதியப்படுவதை இம்மையத்தில் மட்டுமே காணலாம்.
 3. விடுப்புகள் குறித்த விபரத்தினை பயிற்சியாளர்கள் மையத்தில் தெரிவிக்க வேண்டும்.
 4. பயிற்சியாளர்களது வருகையினை சிவகுரு சிவசித்தன் தமது நேரடி தொடர் கண்காணிப்பில் கண்காணித்து வருகிறார்.
 5. தினமும் பயிற்சியாளர்கள் செய்யும் பயிற்சிகளையும் சிவகுரு சிவசித்தன் நேரடியாக கண்காணிக்கிறார்.
 1. உணவு விதிமுறைகள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து செய்வதையும், தவறுதல்கள் செய்யும்போது அதனைத் திருத்தியும் சிவகுரு சிவத்தன் தனது பயிற்சியாளர்களின் உடல் நலனை மேம்படுத்துகிறார்.
 2. பயிற்சியாளர்களுக்காக அவ்வப்போது கலந்தாய்வுக் கூட்டங்கள் (உள்ளூர், வெளியூர், பயிற்சியாளர்களுக்கு தனித்தனியாக) நடத்தி, அவர்களின் உடல் நலம், மனநலம் பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து அவர்களது வாழ்வின் தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கிறார்.
 3. உள்ளூர் பயிற்சியாளர்கள் தினமும் மையத்திற்கு வந்து பயிற்சிகள் செய்கிறார்கள்.
 4. வெளியூர் பயிற்சியாளர்கள் வாரம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மையத்திற்கு வந்து பயிற்சிகள் செய்து பயிற்சி செய்யும் முறையினை சரி பார்த்துக் கொண்டு செல்கிறார்கள்.
 5. பிற யோகா மையங்கள் போல அல்லாது இம்மையத்தில் தொடர்ந்து இரண்டு/ மூன்று வருடங்களாக மையத்திற்கு வந்து பயிற்சி செய்யும் பயிற்சியாளர்கள் நிறைய பேர் உள்ளனர்.
 6. வாசியோகக் கலையின் மூலம் தனது நோய் நீங்கி, வாசியின் பயன் உணர்ந்து, தினமும் மையத்திற்கு வாழ்நாள் முழுவதும் வந்து பயிற்சிகள் செய்ய விருப்பம் உள்ளதாக தானாக மனமுவந்து சொல்லும் பயிற்சியாளர்களை உருவாக்கி உள்ளதே சிவகுரு சிவசித்தனின் தனித்துவம் ஆகும்.

Post a Comment