கொட்டாவி வந்தது அரை வாய் தான் திறக்க முடிந்தது வலது பக்கம் பொட்டு வலித்தது. கண்கள்கனத்தது எரிந்தது

தேகப்பிரபஞ்ச உணர்வுகள்

5.3.15(வியாழக்கிழமை )

அன்று ஒரு  காலை தூக்கி போட்டு ஒரு விரல், மற்றொரு விரல் சேர்த்து வைத்து நடுவில் விரல் சேராமல் விலகி இருக்க வேண்டும் தலையை லேசாக முன்னால் வளைத்து முதுகு தண்டின் கீழ் உணர வேண்டும் சிவகுரு இப்பொழுது என்னால் ஒரு 6 மணி அளவில் அன்று இந்த முத்திரை இதை உணர்வோம் என்று உணர முடிகிறது சிவகுரு அன்று மாலை 6 மணி மாலை முதுகு தண்டில் சரியாக கவ்வி பிடித்தது வலி தாங்காமல்  போட்டு விட்டு தான் சென்டருக்கு வந்தேன்.

ஆனாலும் மந்திரம் சொல்லும் போது என் தலை குனிய முடியவில்லை ஒரு  பக்கம் முதுகில் இடுப்புக்கு மேல் வித்தியாசமான வலி கஷ்டப்பட்டு குனிந்து மந்திரம் கூறியதும் சரியானாலும் குனியும் போது எல்லாம் மூச்சு பிடிப்பது போல் வலி, முதுகு பக்கம் கீழ் வலியை உணர்ந்தேன். அந்த வலி அடி வயிற்றில் கர்பப்பையில் வலது பக்கம் உணர்ந்தேன்.

கற்பப்பையில் மாலை 6 மணியில் உருத்துவது போல் உணர்ந்தேன். கைவிரலில் இருந்து கை முழங்கை வரை வலது பக்கம் இழுத்து வலித்தது. தொண்டை உள் நாக்கு வரண்டு இழுத்தது. பிடரியில் இருந்து இரண்டு தோல்பட்டை வரை கவ்விபிடித்து பயங்கரமான எரிச்சல், வலி அடி வயிறு எல்லாம் வெப்ப ஆற்றல் உணர்ந்தேன் வெப்பம் தாங்காமல் மூச்சு வெளியேறியது. புதன் கிழமை மதியத்திலிருந்தே கீழ் பற்கள் முன் பக்கம் பல்எலுறு எல்லாம் வலித்தது.

அதே போலே கன்னம் தாடை தலை நெற்றி பொட்டு காது வலது பக்கம் மதமதப்பாக இருந்தது. கொட்டாவி வந்தது அரை வாய் தான் திறக்க முடிந்தது வலது பக்கம் பொட்டு வலித்தது. கண்கள்கனத்தது எரிந்தது நீர் வெளியேறியது. 3 முறை குளிர் காற்று தழுவிய போது புல்லரித்தது தீடீர் என்று வெண்மை நிறத்தில் ஒளி தெரிந்தது.

2 (239)கால் வலியை உணர ஆரம்பித்ததும் எடுத்துவிட்டேன் எரிச்சல் தாங்க முடியவில்லை சிவகுரு. குரு வந்து விட வேண்டும் என ஏங்கியது நினைத்து நிமிடத்தில் சிவகுரு ஓய்வு சொன்னதும் கண்களை திறக்க முடியவில்லை பல் எலுறு எல்லாம் வலி. ஆனால் உடம்பு fresh ஆக இருந்தது ஆனால் 2 நாட்கள் குனிந்து இறை வணக்கம் செய்ய முடியவில்லை சிவகுரு நன்றி சிவகுரு.

‪#‎அனைத்தையும்_விட்டுவிடு


12.3.15(வியாழக்கிழமை )

அன்று இடது காலை தூக்கி போட்டு இடது கை வயிற்று நடுவில் உடம்போடு கை கட்டுவது போல் 5 விரலில் நடு மூன்று விரலில் இடுப்பிற்கு வெளியே தெரியும்படி வைக்க வேண்டும் ஆள்காட்டி விரலும் பாம்பு விரலும் தொண்டையை பிடிப்பது போல் வைத்து நெற்றி மையத்தை பார்க்க வேண்டும். முதல் முறை பார்த்த போது நெற்றி மையம் கவ்வி பிடித்து தலை நெற்றி பாரமாக கவ்வியது சிவகுரு ஓய்வு கூறி மீண்டும் ஆரம்பித்த போது அதே போல் நெற்றியில் உணர்ந்தேன்.

பின் தொண்டை கமருவது போல், அடைப்பது போல் இருமல் வந்தது பின் கவ்வி பிடித்தது. ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது. ஏப்பம் ஏப்பமாக வந்தது. ஒரு பக்கம் நெஞ்சுக்கு கீழ் கவ்விபிடித்தது மூச்சு கிணறுவது போல் இருந்தது இடது பக்கம் கை நீட்டிய 3 விரல் இழுத்தது முதுகு தண்டில் எப்பொழுதும் போல் கவ்வி பிடித்தது. முன்னால் காற்று வீசி தள்ளியது. பின்னால் தென்றல் போல் தழுவியது 3 முறை இதை உணர்ந்தேன் அப்பொழுது சுகமாக இருந்தது.

புதன்கிழமை காலை வாயே வெந்தது போல் எலுறு எல்லாம் வலி இம்முறை மேல் பக்கம் வாய் தண்ணீர் வைத்தால் கொதிக்கிறது சிவகுரு நாக்கு எல்லாம் புண் வீட்டிற்கு வந்ததும் உடம்பின் அடித்து போட்டது போல் வலி இதில் எலுறு எல்லாம் வீண்வீண் என்று தெரிந்தது. சிவகுரு காலை உடல் வலி மெதுவாக தான் கிளம்பினேன்.

இரண்டு கண்ணும் பாரமாக இருந்தது. ஆனால் பயிற்சிக்கு பின் சுறுசுறுப்பாக வேலை பார்த்தாலும் உடம்பின் வலியும் தொண்டை வரண்டு இருப்பது, எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் குடித்து முடித்தது வரண்டு ஒரு மாதிரி கவ்வுகிறது.  உடம்பு வலி கண் பாரம் மத்தியம் குறைந்து விட்டது. தொண்டையில் வாய்புண் மட்டும் அப்படியே இருக்கிறது சிவகுரு. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அனுபவங்களை உணர வைக்க சிவகுருவிற்கு நன்றி.

நன்றி சிவகுரு

 Sivasithan Vaasiyogamவாசிதேக பக்தை

ராதாதேவி மணிவண்ணன்

சிந்தாமணி, மதுரை.

Post a Comment