எதிர்மறை எண்ணத்தின் பாதிப்பும்…

சிவசித்தன்

உண்மை வாக்கு பழிப்பதை உணரவைப்பது சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


சிவகுருவே சரணம்

 சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலை

அறியாமல் வாழும் மக்களை திருத்தி நல்வழிப்படுத்துவது தான் சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலையாகும். அறியாமை என்று சிவகுரு உணர்த்துவது மக்களின் தவறான உணவுப் பழக்க வழக்கங்களும் அதனால் தேங்கும் கழிவுகளால் உடலின் உள் உறுப்புகள் செயல்படாமல் நோய் என்ற பல பெயர்களை வைத்து மக்கள் அறியாமையில் உழல்கிறார்கள்.

மற்ற யோகா முறைகளுக்கும் சிவகுருவின் வாசியோக முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. வாசியோகம் என்ற பெயரில் பல பேர் கற்றுத் தருவதாக இணையதளத்திலும் அல்லது பல புத்தகத்திலும் படித்திருந்தாலும் அதில் எந்த உண்மையையும் மக்கள் உணரவில்லை. ஆனால், சிவகுருவின் வாசியோகத்தில் மட்டுமே உடல் கழிவுகள் நீங்குவதையும், மக்கள் தங்கள் உடல் குறை தீர்ந்து ஆரோக்கியமாக வாழ்வதையும். அவர்களே உணர்ந்து கூறின பல உண்மைப் பதிவுகள் ஏராளமாக உள்ளன. அதனால், தான் 50 பேரில், ஆரம்பித்த ஸ்ரீ வில்வம் யோகா மையம் இன்று தோராயமாக உள்ளூர், வெளியூர், வெளிநாடு என்று 1000 பேரைத் தாண்டி தனது வெற்றியை நிலைநாட்டி வருகிறது.

சிவகுருவின் வாசியோகப் பயிற்சியில், ஒவ்வொரு பயிற்சியாளர்களுக்கும், நாடி பார்ப்பது முதற்கொண்டு பயிற்சிகள் கொடுப்பது அவர்களின் அனுபவங்களை கேட்டுப் பெறுவது வரை ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.

சிவகுருவின், வாசியோக முறை மிகவும் கடினமானது தான் சிவகுருவும், மிகவும் கண்டிப்பானவர் தான். அந்தக் கண்டிப்பு மக்களை நல்வழிப்படுத்துவதற்காகத்  தான் என்பதை உணர்பவர்கள் தான் இங்கு, நிலைக்கிறார்கள். மற்றவர்கள் வெளியில் சென்று, எந்தத் தீர்வும் கிடைக்காமல் சிவகுருவின் கண்டிப்பில் தான் முழு ஆரோக்கியம் பெறுகிறோம் என்பதை உணர்ந்து மீண்டும் வந்த வண்ணமாக உள்ளனர்.

1 (1587)சிவகுரு சிவசித்தன் தனது வாசியோகப் பயிற்சியில் குடும்பமாகவே வர வலியுறுத்துகிறார். ஏனென்றால் குடும்பம் முழுவதும் வாசியோகப் பயிற்சியை செய்து முறையாக உடல் கழிவுகள் நீங்கி, முழு ஆரோக்கியம் அடைந்து உடல் உன்னதத்தை உணர வேண்டும் என்பதே சிவகுருவின் எண்ணமாகும். கணவன், மனைவியாக வந்து செய்பவர்கள் முறையாக வாசியோகப் பயிற்சியை செய்யும் பொழுது, ஆரோக்கியமான, குழந்தைகள் பெறவும் வழிவகை செய்கிறது.

சிவகுரு, சிவசித்தனின் வாசியோகப் பயிற்சியானது உடல், நோய் தீர்க்கும் பயிற்சியோ, அல்லது உடல் இளைப்பதற்கான பயிற்சியோ அல்லது குறுகிய காலத்தில் மனதைப் பண்படுத்தும் பயிற்சியோ அல்ல. அதனால் உடல் நோய் உள்ளவர்கள் தான் வாசியோகப் பயிற்சியை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தவறானது. சிவகுருவின் வாசியோகப் பயிற்சியை செய்யாதவர்கள் அனைவருக்கும் அவர்கள் அறியாமலேயே உடலில் கழிவுகள் தேங்கியிருக்கும், என்பதே முற்றிலும் உண்மை.

அந்த உடலில் உள்ள கழிவுகள் தான் உடல் ஆரோக்கியத்தை சிறிது சிறிதாக கெடுப்பதோடு நமக்குள் எதிர்மறை எண்ணங்களையும் உருவாக்கி வருகிறது.

அந்த எதிர்மறை எண்ணத்தின் பாதிப்பும் நமது உடலெங்கும் பரவி நாளடைவில் நோயாக உருமாறி அந்நோயின் தீவிரத்தை அதிகமாக்கி வருகிறது.

சிவகுருவின் வாசியோகப் பயிற்சியில் சிவகுரு நாடி பார்க்கும் பொழுது அந்த எதிர்மறை எண்ணத்தின் பாதிப்பையும் களைந்து எடுத்து வருகிறார்.

சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சியானது உடல் நோய், தீர்க்கும் பயிற்சி அல்ல, அடிப்படையில் அவ்வாறு தோன்றினாலும், முழுக்க முழுக்க ஒரு மனிதனின் உடஉன்னதத்தை உணர வைக்கும் பயிற்சியே ஆகும்.

நன்றி சிவகுருவே

Post a Comment