உன்னுடைய ஆனந்தத்திற்கே நாங்கள் எல்லோரும்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

போற்றுதலுக்குரிய சிவகுருவே, எங்கள் சிவகுரு சிவசித்தனே, பக்தன் என்ற நிலையில் இருந்து நின் புகழ் பரப்புவதற்கு பதிலாக பக்தன் இல்லாமல் பரமன் இல்லை என்று பொய்யுரைக்கின்றோம். பரமனாகி உன்னுடன் எல்லா விதத்திலும் நாங்கள் சமமாகி விட துடிக்கின்றோம்.

1 (3252)

உன்னுடைய ஆனந்தத்திற்கே நாங்கள் எல்லோரும் என்பதை புரிய வைப்பதற்காகவே தாங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். (தாங்கள் இல்லாமல் எங்களால் வாழமுடியாது என்பதே உண்மை.) ஐந்தொழில் புரியும் உமக்கு தொண்டு செய்வதற்காகவே நாங்கள் படைக்கப்பட்டு உள்ளோம் என்பதை புரிய வைத்த நீரே இந்த அகிலம் முழுவதையும் காக்கும் அன்பானவன், அனைத்துக்கும் மேலானவன்.

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Post a Comment