இயற்கையின் சுகாதார விதிகளை மீறுகின்றோம்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

பிரம்மாண்டமான இப்பிரபஞ்சம் பிணியால் பீடிக்கப்பட்டுள்ளது. இயற்கை வகுத்துக் கொடுத்த நியதிகளை மனிதன் மீறி நடத்தலே அனைத்து பிணிகளுக்கும் காரணம் ஆகும். முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பிரபஞ்சம் ஆனது ஆரோக்கிய குறைபாடு உண்டாகும் திசையை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. மனிதன் உருவாக்கிய செயற்கை நாகரிகமானது (பழக்கவழக்கமானது) உடலின் ஆற்றலை அழித்ததோடு மட்டுமல்லாமல் சிறிய உடல் வேதனையை கூட தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையை உருவாக்கித் தந்துள்ளது.1 (3234)

தற்பொழுது உள்ள குழந்தைகள், இயற்கையின் சுகாதார விதிகளை மீறுகின்றோம் என்பது கூட தெரியாமல் அறியாமையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது நாம் வாழும் சமுதாயத்தில் ஒருவர் கூட ஆரோக்கிய குறைபாடு உருவானதற்கான உண்மை காரணத்தை அறிய விரும்புவதில்லை. அவர்கள் ஆரோக்கிய குறைபாட்டையும் ஆரோக்கிய குறைபாட்டால் உருவான அசௌகரியமும் உடனே நீங்க வேண்டும் என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

மருத்துவரை கூட நாடாமல் விளம்பரப்படுத்தப்படும் எந்த விதமான நஞ்சையும் கூட உட்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். மருந்துகளால் நோய் குணமாகாது. மாறாக நோயின் வடிவத்தையும் அது இருக்கும் இடத்தையும் மாற்ற மட்டுமே மருந்துகளால் முடியும்.

மருந்துகள் அந்த நேரத்திற்கு நிவாரணம் தந்தால் கூட பல காலத்திற்கு உடம்பில் தங்கி மிக பெரிய ஆரோக்கிய குறைபாட்டை உண்டு பண்ணுகிறது என்பதே உண்மை. ஆரோக்கியம் வேண்டி மருந்துகள் உபயோகப்படுத்தியே, வாழ்நாள் நோயை தனக்கான பரிசாகப் பெறுகின்றான் இன்றைய நவநாகரிக மனிதன். மனிதன் போதை பழக்கத்திற்கு அடிமையாவதும் மருந்து உட்கொள்ளும் பழக்கவழக்கதாலேயே.

ஆரோக்கிய குறைபாடு என்று ஒன்று ஆதியிலேயே கிடையாது என்பது எங்கள் சிவகுரு சிவசித்தன் கூற்று. அதை மெய்ப்பித்துக் காட்டியவர் எங்கள் சிவகுரு சிவசித்தன். அதற்கு நான் அவருடன் பயணித்த இந்த மூன்று ஆண்டுகளே சாட்சி. ஆரோக்கியம் வேண்டுவோர் தங்களுடைய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் விட்டு விட்டு சிவகுரு சிவசித்தனுடன் பயணிக்க வாருங்கள். சிவகுரு சிவசித்தன் அருளால் ஆதியில் நமக்கு என்ன இன்பம் விதிக்கப்பட்டதோ அது நமக்கு மீண்டும் கிடைக்கும். நலமான உடலுடன் ஆனந்தம் துய்ப்போமாக!

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Post a Comment