“ இன்று காலை மலம் முழுமையாக வெளியேறியதா” என்பதே…

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்”

‎சிவகுருசிவசித்தன் அவர்கள் மனித உடலில் நிறைந்திருக்கும் கழிவுகள் ஐந்து என உரைக்கிறார்.
‎மலம்
‎சிறுநீர்
‎அபானன்
‎சளி
‎வியர்வை

இந்த ஐங்கழிவுகளில் மலத்தை பற்றி முக்கியமாகக் குறிப்பிடுகிறார். மலமே மனிதனை அழிக்கும் எனக்கூறுகிறார்.‎வாசிதேகப்பயிற்சிகளில் முத்தான மும்முறைகளை உண்மையாக கடைபிடிக்கும் பட்சத்தில் வயிற்றில் தேங்கியுள்ள மலம் வெளியேறி அதன் தொடர்ச்சியாக மற்ற கழிவுகளும் வெளியேற்றப்பட்டு மனிதன் தன் உடலின் உண்மைகளை உணரலாம் எனக் கூறுகிறார்.

1 (1579)இவ்வாறு மனிதனை தனக்குள் இருக்கும் உண்மைகளை உணரவைக்கும்‎சிவகுருசிவசித்தனின் ‎வாசிதேகப்பயிற்சிகளின் மும்முறைகளைப் பற்றி பின் காண்போம்.
தொடரும்
நன்றி சிவகுரு.  1. “சிவகுருவே சரணம்”

“மலம்”
தன் உடலில் உபாதைகளென தீர்வு வேண்டிவரும்‎ வாசிதேகப் பயிற்சியாளர்களிடம் எங்கள்  சிவகுரு வினவும் முதல் வினா “ இன்று காலை மலம் முழுமையாக வெளியேறியதா” என்பதே. சாதாரண மனிதர்களிடம் மலம் வெளியேறியதா என்று கேட்டால் வெளியேறியது என்றே பதிலுரைப்பார்கள்.

ஆனால் முழுமையாக வெளியேறியதா என்ற கேள்வியின் பொருள் அவர்களுக்கு தெரியாது. முழுமையாக மலம் வெளியேறியதா என்ற வினாவின் பொருள் எங்கள் ‎வாசிதேகப்பயிற்சியாளர்களுக்கு மட்டுமே தெரியும்.  ஆம்! மலம் முழுமையாக வெளியேறுதல் என்பது              எங்கள்‎ சிவகுருவையும் ‎வாசிதேகப்பயிற்சிகளையும் உண்மையாக      உணர்ந்த வாசிதேகப்பயிற்சியாளர்களுக்கு மட்டுமே.

சாதாரண மானிடருக்கு மலம் வெளியேறுதலுக்கும் வாசிதேகப்பயிற்சியாளர்களுக்கு மலம் முழுமையாக வெளியேறுதலுக்கும் என்ன வேறுபாடு?
தொடரும்
நன்றி சிவகுரு.

Post a Comment