அன்றாடம் மலம் வெளியேறுவது என்பது ஒரு சிரமமான நிகழ்வாகவே…

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்”

அசைவ உணவு, கோதுமை உணவு எண்ணெய் பலகாரங்கள் போன்ற உணவுகளை உண்ணும் சாதாரண மனிதருக்கு அன்றாடம் மலம் வெளியேறுவது என்பது ஒரு சிரமமான நிகழ்வாகவே இருக்கும்.

அதிகாலை கழிப்பறையில் இருந்து முகமலர்ச்சியுடன் வருவதே அன்றைய நாளின் சிறந்த தொடக்கமாக அமையும். மலம் சுளுவாகவும், முழுமையாகவும் வெளியேறாமல் வயிற்றில் ஒருவித சுமையுடன் திருப்தியற்ற நாளின் தொடக்கம் நிச்சயம் திருப்தியாக முடியாது. இதை நான் ‎சிவகுருவின் ‎வாசிதேகப்பயிற்சிகளில் இணைவதற்கு முன் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு மலம் நன்றாக வெளியேறியது என்று உரைக்கும் சாதாரண மனிதன் முழுமையாக மலம் வெளியேறியதன் உன்னத உணர்வை உணராதவரே. ஆனால் ‎சிவகுருவையும் சிவகுருவின்  ‎வாசிதேகக்கலையையும் உண்மையாக உணர்ந்த ‎வாசிதேகப்பயிற்சியாளர்கள் முதல்நாள் உடலில் சேர்ந்த மலத்தை அதிகாலை முழுமையாக வெளியேற்றி அன்றைய நாளை சிறப்பாக தொடங்குகின்றனர். ஏனிந்த வேறுபாடு?
தொடரும்
நன்றி சிவகுரு.“சிவகுருவே சரணம்”

1 (1578)சிவகுரு சிவசித்தனின் வாசிதேகப்பயிற்சிகளில் முத்தான மும்முறைகளில் முதல் முத்து உணவுமுறைகளாகும்.‎சிவகுரு தன் ‎வாசிதேகப்பயிற்சியாளர்களுக்கு உண்ண வேண்டிய உணவுவகைகளையும், தவிர்க்க வேண்டிய உணவுவகைகளையும், உணவு உண்ண வேண்டிய நேரங்களையும் சிறப்பாக தொகுத்தளித்துள்ளார். அதிகாலை மூன்றரைமணியில் ஆறு டம்ளர் தண்ணீர் அருந்துவதில் இருந்து உணவுமுறைகள் ஆரம்பமாகின்றன. உணவுமுறைகளைப் பற்றி விரிவாக பின்வரும் பதிவுகளில் காண்போம்.

இந்த சிறப்பான உணவுமுறைகளை உண்மையாக பின்பற்றும்‎ வாசிதேகப்பயிற்சியாளர்களின் உடலில் தோன்றும் மலமானது எளிதில் வெளியேறும் தன்மையுடையதாகிறது. அதிகாலை ஆறு டம்ளர் தண்ணீர் அருந்திய சிறிது நேரத்தில் மலம் இலகுவாக வெளியேறி அந்த நாளை சிறப்பானதாக தொடங்க வைக்கிறது.
தொடரும்

நன்றி சிவகுரு. 

Post a Comment