அதிகமான சளியை தோற்றுவித்து கழிவாக படியச்செய்கிறது…

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்”

“சளி”

‎சிவகுருசிவசித்தன் மனித உடலின் ஆற்றலை மறைக்கும் மற்றொரு முக்கிய கழிவாக சளியைக் குறிப்பிடுகிறார். மனித உடலில் உள்ளுறுப்புகளின் சில இயக்கங்களுக்கு சளிப்படலம் தேவையான ஒன்றே. தன் இயக்கங்களுக்கு தேவைப்படும் சளியை தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் வாய்ந்தது நம் உடலமைப்பு.

ஆனால் மனிதன் உட்கொள்ளும் பொறித்த உணவுவகைகள், எண்ணெய் பலகாரங்கள், எண்ணெய் மிதக்கும் குழம்புவகைகள் மற்றும் குழந்தைகள் உண்ணும் க்ரீம்பிஸ்கட்டுகள் போன்றவை உடலில் அதிகமான சளியை தோற்றுவித்து கழிவாக படியச்செய்கிறது என்று சிவகுருசிவசித்தன்   தெரிவிக்கிறார்.
தொடரும்
நன்றி சிவகுரு. 

“சிவகுருவே சரணம்”

DSC02260சளி நாம் நினைப்பது போல் நாசியிலும், நெஞ்சிலும் மட்டும் இருப்பதில்லை. மனித உடல் முழுவதும் சளி கழிவாக வியாபித்துள்ளது என்று உரைக்கிறார் எங்கள்‎ சிவகுரு சிவசித்தன். அந்த சளியே உடலின் பல உபாதைகளுக்கு காரணியாக இருக்கிறது.

சளியின் தீர்வுக்காக மேற்கொள்ளப்படும் மருத்துவமுறைகள் அனைத்தும் சளியை வெளியேற்றும் தன்மை உடையவை அல்ல. மாறாக சளியை கெட்டிப்படுத்தி தற்காலிக நிவாரணம் தரும் முறையாகவே இருக்கின்றன. அவ்வாறு கெட்டிப்படுத்தப்பட்ட சளி உடலில் கழிவாக படிந்து பின்னாளில் பெரும் உபாதைகளுக்கு காரணமாகிவிடுகின்றது. மேலும் என்ன உபாதைகள்?
தொடரும்
நன்றி சிவகுரு. 

Post a Comment