அகமனன் எம் தமிழ்த்தென்னவன்…

சிவசித்தனின் பாமாலை

 இறை என்பது உடலில்தான் இருக்கிறது என்பதை அனுதினமும் உணர்த்தும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


சிவசித்தனின் வான்வாசி  பாடல் 05

DSC02273

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

நன்மை நாடி பாண்டிய நாடு வந்தேன்!
நாடி அறிந்து!
நாற்றங்களை வெளியேற்றி!
நற்கதி பின்பற்றச் செய்து!
நற்றமிழ் வாசியில் பயிலச் செய்து!
நால்வரோடு என்னையும் இணையப் பெற்றேன்!!
நாதனை என்னுள் உணரப் பெற்றேன்!
நர்த்தனமாட சிவசித்த மந்திரமுரைத்து
நல்லதோர் மருதில்லா மார்க்கத்தை
நயம்பட உணர்த்தி
நானிலம் போற்றும்படி
நன்மை பல செய்ய வைத்து – உண்மை
நல்கிட வாய்த்த
நாதனே! எம் சிவகுரு சிவசித்தனே!!! சிவசித்தனின் வான்வாசி  பாடல் 06

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

வீடுபேறு அடைந்தேன்
விடியலுக்கு முன் எழுகையிலே!

காயமதில் உண்மை – தானாய்
கால் உள் சென்றதுமே!

கண் முன்னே கழிவுகளின் வெளியேற்றம்
எம் உடலதிலே நல்ல முன்னேற்றம்!

உடல் வெப்பந்தனிலே உயிர் அறியும்
உண்மை உணர்ந்தேன்!

அறிந்த உண்மையை வாசியால்
சிவசித்த மந்திரம் மூலம் உணரப் பெற்றேன்!

உடலிலே பல்வேறு அதிசயம்
வாசியான உண்மை அகமானபின்!

உணர்வாய் அறிவது எம் உயிரின்
நல்லெண்ணத்தால் என உணர்ந்தேன்!

என் அகத்தில் தென்பட்ட என்
அகமனன் எம் தமிழ்த்தென்னவன்
சிவகுரு சிவசித்தன் ஒளி ரூபமாய்….
ஓங்கார மூர்த்தியாய் ஆதி முதல்வனாய்….
ஜோதி வடிவில் என் உண்மையாய்…..
மனித வடிவில் கண்டேன்!!


வாசியோக பக்தன்

சுந்தர் சின்னமனூர்


 

 

Post a Comment